ஆத்தாடி தனுஷோடு நடிக்க போறியா வேண்டவே வேண்டாம்.! பிரபல நடிகையின் அம்மா கதறல்.! ஒருவேளை உண்மை தெரிந்திருக்குமோ…?

dhanush
dhanush

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் தனுஷ் இவர் தமிழை தாண்டி பாலிவுட், ஹாலிவுட் என கலக்கி கொண்டு இருக்கிறார். உச்ச நட்சத்திரமாக இருக்கும் தனுஷ் திருச்சிற்றம்பலம், வாத்தி, நானே வருவேன் ஆகிய திரைப்படங்களில் மிகவும் பிஸியாக நடித்து வருகிறார். இந்த நிலையில் பிரபல நடிகையின் அம்மா தனுசுடன் நடிக்க வேண்டாம் எனப் பிடிவாதமாக கூறியுள்ளார் இந்த தகவல் தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது.

தனுஷ் தமிழ் சினிமாவில் பல திரைப்படங்களில் நடித்திருந்தாலும் அவருக்கு மிகப்பெரிய வெற்றியை தேடிக் கொடுத்த திரைப்படம் காதல் கொண்டேன் இந்த திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் முதன்முதலாக கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை சோனியா அகர்வால். இந்த திரைப்படத்தை தொடர்ந்து 7ஜி ரெயின்போ காலனி, கோவில், மதுரை புதுப்பேட்டை, என பல திரைப்படங்களில் சோனியா அகர்வால் நடித்திருந்தார்.

மேலும் காதல் கொண்டேன் திரைப்படத்தில் தனுஷ் மற்றும் சோனியா அகர்வால் இருவரின் கெமிஸ்ட்ரி நன்றாக ஒர்க் அவுட் ஆனது அதனால் படமும் மாபெரும் வெற்றி பெற்றது இந்த நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டி ஒன்றில் சோனியா அகர்வால் கலந்து கொண்டார் அதில் அவர் கூறிய தகவல் மிகவும் சுவாரசியமாக வைரலாகி வருகிறது.

soniya agarwal
soniya agarwal

அதில் அவர் கூறியதாவது முதலில் காதல் கொண்டேன் திரைப்படத்தில் நடிக்கப் போவதாக தன்னுடைய அம்மாவிடம் சோனியா அகர்வால் கூறியுள்ளார் உடனே அந்த ஹீரோ யார் என்று கேட்டுள்ளார் அதற்கு தனுஷ் என்று சொன்னதும் அவரின்ன் தோற்றத்தை பார்த்து நீ இந்த திரைப்படத்தில் நடிக்கவே கூடாது தனுஷ்க்கும் உனக்கும் செட் ஆகாது அதனால் இந்த திரைப்படத்தில் நடக்கவே கூடாது என கூறியுள்ளார்.

ஆனால் சோனியா அகர்வால் அவர்களுக்கு கதை நன்றாக பிடித்து விட்டதால் நான் நடிக்கிறேன் என கூறிவிட்டார் பின்பு பிடிவாதமாக காதல் கொண்டேன் திரைப்படத்தில் நடித்தார் காதல் கொண்டேன் திரைப்படம் வெளியாகி மாபெரும் வெற்றி திரைப்படமாக அமைந்தது அதுமட்டுமில்லாமல் சோனியா அகர்வாலுக்கு இந்த திரைப்படத்திற்கு பிறகு நல்ல அங்கீகாரம் கிடைத்தது. பல வருடங்களுக்கு பிறகு இந்த தகவல் தற்பொழுது மீண்டும் வைரலாகி வருகிறது.

soniya agarwal
soniya agarwal