கல்லாப் பெட்டியை திறந்து வைத்திருக்கும் சிவகார்த்திகேயன் – டான் படம் 6 நாள் முடிவில் தமிழகத்தில் மொத்தமாக அள்ளிய வசூல் எவ்வளவு தெரியுமா.?

sivakarthikeyan
sivakarthikeyan

தமிழ் சினிமா உலகில் சைலண்டாக இருந்துகொண்டு தொடர்ந்து வெற்றிப் படங்களை கொடுத்து வருபவர் சிவகார்த்திகேயன் இவர் நெல்சன் உடன் இணைந்து கடைசியாக நடித்த திரைப்படம் டாக்டர்.

படம் சிறப்பாக இருந்ததால் மக்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனத்தை பெற்று வசூலில் அடுத்து நொறுக்கியது சொல்லப்போனால் 100 கோடிக்கு மேல் அள்ளி புதிய சாதனை படைத்தது அதனை தொடர்ந்து அட்லீயின் உதவி இயக்குனர் சிபிச்சக்கரவர்த்தி உடன் சிவகார்த்திகேயன் முதன் முறையாக கூட்டணி அமைத்து நடித்த திரைப்படம் தான் டான்.

இந்த படத்தில் சிவகார்த்திகேயனுடன் இணைந்து சமுத்திரகனி, எஸ் ஜே சூர்யா, பிரியங்கா அருள்மோகன், சிவாங்கி போன்ற மிகப் பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்து இருந்தனர். இந்த படமும் காமெடி சென்டிமென்ட் என இரண்டும் சிறப்பாக அமைந்ததால் தற்பொழுது நல்ல வரவேற்ப்பை பெற்று வசூல் வேட்டை நடத்தி வருகிறது முதல் வாரத்திலேயே டான் படக்குழு போட்ட காசை எடுத்து.

தற்பொழுது தொடர்ந்து நல்ல வசூல் வேட்டை நடத்தி வருவதால் லாபத்தை பார்த்து வருகிறது இதனால் படக்குழுவும் செம சந்தோஷத்தில் இருக்கிறது இப்படி இருக்கின்ற நிலையில் சிவகார்த்திகேயனின் டான் திரைப்படம் 6 நாள் முடிவில் தமிழகத்தில் மட்டும் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளன.

அதன்படி பார்க்கையில் சிவகார்த்திகேயனின் டான் படம்  இதுவரை தமிழகத்தில் 42 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. நாளுக்கு நாள் வசூல் வேட்டை தொடர்ந்து நடந்து வருவதால் நிச்சயம் 100 கோடியை தாண்டி ஒரு புதிய சாதனையைப் படைக்க இருக்கிறது என சினிமா வட்டாரங்கள் பலரும் கூறி வருகின்றனர்.