டான் திரைப்படத்திற்கு சரியான தேதி குறித்த நடிகர் சிவகார்த்திகேயன்..! எல்லாம் வலிமை மேல் இருக்கும் பயம் தான் காரணம்..!

sivakarthi-don
sivakarthi-don

தமிழ் சினிமாவில் தற்போது நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் மற்றும் பிரியங்கா நடிப்பில் வெளியான திரைப்படம் தான் டாக்டர் இத்திரைப்படம்  திரையரங்கில் வெளியாகி நல்ல வரவேற்ப்பை பெற்றது மட்டுமில்லாமல் மாபெரும் வசூலை தட்டி சென்றது.

அந்தவகையில் இத்திரைப்படத்தை தொடர்ந்து சிவகார்த்திகேயன் மற்றும் பிரியங்கா இருவரும் இணைந்து நடித்துக் கொண்டிருக்கும் திரைப்படம்தான் டான் இந்த திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் எஸ் ஜே சூர்யா நடித்து வருகிறார்.

அந்த வகையில் டாக்டர் திரைப்படத்தில் சிவகார்த்திகேயனின் கதாபாத்திரம் மிகவும் அமைதி வாய்ந்ததாக இருக்கும் ஆனால் டான் திரைப்படத்தில் அதற்கு மாறாக இருப்பது மட்டுமில்லாமல் குறும்புகளும் காமெடிகளும் நிறைந்த திரைப்படமாக இருக்கும் என படக்குழுவினர் தெரிவித்துள்ளார்கள்.

மேலும் இத் திரைப்படமானது தங்களுடைய கல்லூரி காலத்தை ஞாபகப்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டது மட்டுமில்லாமல் இந்த திரைப்படத்தில் சிவகார்த்திகேயன் கல்லூரி மாணவனாகவும் எஸ் ஜே சூர்யா பிரின்ஸ்பால் ஆகவும் நடித்துள்ளார். இது மட்டுமின்றி சிவாங்கி, பாலசரவணன் போன்ற பலர் இப்படத்தில் நடித்துள்ளார்கள்.

இந்நிலையில் இந்த திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் கூட சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் இந்த திரைப்படம் ஜனவரி 26ஆம் தேதி  வெளியாக போவதாக படக்குழுவினர்கள் முடிவு செய்திருந்தார்கள் இந்நிலையில் இந்த திரைப்படத்தில் டப்பிங் பணிகள் மிக விறுவிறுப்பாக நடந்து கொண்டு வருகிறது.

don-1
don-1

இதனை தொடர்ந்து இந்த திரைப்படத்தில் நடத்ததன் மூலமாக எனக்கு சிறந்த அனுபவம் கிடைத்ததாக எஸ் ஜே சூர்யா கூறியது மட்டுமின்றி இத்திரைப்படம் எனக்கு ஒரு திருப்புமுனையாக அமையும் என கூறி உள்ளார்.