தமிழ் சினிமாவில் நடிக்க தொடங்கிய சில காலங்களிலேயே பெரிய அளவு பிரபலமடைந்தவர் நடிகர் சிவகார்த்திகேயன். இவரது திரைப்படங்கள் அனைத்தும் காமெடி கலந்து அமைவதால் அதை மக்கள் மற்றும் ரசிகர்கள் என அனைவரும் என்ஜாய் செய்து பார்க்கின்றனர். டாப் நடிகர்களான அஜித், விஜய் போன்றவர்களுக்கு ஆக்ஷன் படங்கள் தான் ஹிட் கொடுக்கும் என்பது போல நடிகர் சிவகார்த்திகேயனுக்கு காமெடி கலந்த திரைப்படம் தான் பெரிதும் ஹிட் அடிக்கின்றன.
மேலும் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவரும் ஒவ்வொரு படங்களிலுமே சின்னத்திரை மற்றும் புதுமுக நடிகர் நடிகைகளை அறிமுகப்படுத்தி வாய்ப்புகளை கொடுக்கின்றனர். அப்படி சிவகார்த்திகேயன் நடிப்பில் கடைசியாக வெளிவந்த டாக்டர் திரைப்படத்திலும் அவருடன் இணைந்து ஹீரோயினாக பிரியங்கா அருள் மோகன் நடித்திருந்தார் மேலும் சின்னத்திரை பிரபலமான விஜே அர்ச்சனா மற்றும் அவரது மகள் சாரா போன்றவர்களும் நடித்து அசத்தி இருந்தனர்.
தற்போது சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள டான் திரைப்படம் நாளை வெளியாக உள்ளது. இந்த படத்தில் சிவகார்த்திகேயனுடன் இணைந்து ஹீரோயினாக இரண்டாவது முறையாக கைகோர்த்து பிரியங்க அருள் மோகன் நடித்து உள்ளார். மேலும் சின்னத்திரை பிரபலமான சிவாங்கி இந்த படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களின் எதிர்பார்ப்பை தூண்டி உள்ள நிலையில் டான் திரைப்படத்தை திரையரங்கில் காண ரசிகர்கள் பலரும் ஆவலாக எதிர்பார்த்து வருகின்றனர். இதனையடுத்து டான் திரைப்படம் தமிழகத்தில் மட்டும் 500 திரையரங்குகளில் வெளியாக உள்ளதாம்.
இதற்குமுன் தமிழில் ரஜினி, அஜீத், விஜய் போன்றவர்களின் படங்கள்தான் அதிக திரையரங்கில் வெளியாகியது தற்போது இவர்களது வரிசையில் அடுத்து சிவகார்த்திகேயன் இடம் பிடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.