அண்மைக்காலமாக இளம் இயக்குனர்கள் டாப் நடிகர்களை வைத்து சிறப்பான படங்களை கொடுக்க ஆசைப்படுகின்றனர் அந்த வகையில் சிவகார்த்திகேயன் நெல்சன் உடன் இணைந்து டாக்டர் என்னும் சூப்பர் ஹிட் படத்தை கொடுத்தவர் இந்த படமும் 100 கோடி வசூல் சாதனை செய்தது.
அதனை தொடர்ந்து அட்லீயின் உதவி இயக்குனராக பணிபுரிந்த சிபி சக்கரவர்த்தி சிவகார்த்திகேயனுக்கு டான் படத்தின் கதையை கூறியுள்ளார் அந்த கதை அவருக்கு ரொம்பப் பிடித்துப் போகவே அது படமாக உருவாகியது இந்த படம் நேற்று திரையரங்கில் கோலாகலமாக உலக அளவில் ரிலீசானது படம் முழுக்க முழுக்க..
காமெடி சென்டிமென்ட் படமாக இருந்ததால் ரசிகர்கள் பொதுமக்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பைப் பெற்று தற்போது சிறப்பாக ஓடிக்கொண்டிருக்கிறது இந்த படமும் சிவகார்த்திகேயன் கேரியரில் சிறப்பான படமாக இருக்கும் என ரசிகர்கள் கருதுகின்றனர். இப்படி இருக்கின்ற நிலையில் டான் திரைப்படம் முதல் நாள் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது குறித்து தகவல் கிடைத்துள்ளது.
உலக அளவில் சுமார் 15 கோடி வசூல் செய்துள்ளதாகவும் தமிழகத்தில் 9 கோடி வசூல் செய்ததாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன இப்படி இருக்கின்ற நிலையில் சிவகார்த்திகேயனின் டான் திரைப்படம் சென்னை ஏரியாவில் எவ்வளவு வசூலை அள்ளி உள்ளது என்கிற விவரமும் தற்போது கிடைத்துள்ளது அதன்படி பார்க்கையில் சென்னை ஏரியாவில் மட்டும் சுமார் 92 லட்சம் ரூபாய் வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.
சிவகார்த்திகேயன் ரேஞ்சுக்கு இது நல்ல வசூல் என கூறப்படுகிறது. டான் திரைப்படத்தை தொடர்ந்து எந்த ஒரு டாப் நடிகர் திரைப்படமும் அடுத்து உடனே வெளியாகாமல் இருப்பதால் நிச்சயம் டான் திரைப்படம் எதிர்பார்க்காத ஒரு வசூலை அள்ளும் என்பதே படக்குழுவின் கணிப்பாக இருக்கிறது.