உலக அளவில் சிவகார்த்திகேயன் “டான்”.! 11- நாள் முடிவில் அள்ளிய வசூல் எவ்வளவு தெரியுமா.?

don
don

நடிகர் சிவகார்த்திகேயன் திரை உலகில் இதுவரை தேர்ந்தெடுத்த நடித்த திரைப்படங்கள் அனைத்துமே  சூப்பர் ஹிட் படங்களாகவே அமைந்துவிட்டன அதற்கு முக்கிய காரணம் அவர் கமர்சியல் படங்களை தேர்ந்தெடுத்து நடிப்பது தான் என கூறப்படுகிறது.

இவர் நடிப்பில் கடைசியாக வெளியான டாக்டர் திரைப்படம் 100 கோடி வசூலை அள்ளிய நிலையில் அதைத் தொடர்ந்து இளம் இயக்குனர் சிபி சக்கரவர்த்தி உடன் நடித்த திரைப்படம் டான். இந்த படமும் எதிர்பார்க்காத அளவிற்கு காமெடி, சென்டிமென்ட் என அனைத்தும் மிகச் சிறப்பாக உருவாகியுள்ளதால் படத்தை பார்த்து வந்தவர்கள் அனைவரும் கொண்டாடி வருகின்றனர்.

டான் திரைப்படத்தில் நடிகர் சிவகார்த்திகேயனுடன் இணைந்து பிரியங்கா அருள்மோகன், சிவாங்கி, சூரி, சமுத்திரக்கனி, எஸ். ஜே. சூர்யா மற்றும் பலர் நடித்து அசத்தி உள்ளனர். படம் வெளியான நாளில் இருந்து நல்ல விமர்சனத்தையும், வசூலையும் பெற்ற அடித்து நொறுக்கியது.

டாக்டர் திரைப்படத்தை தொடர்ந்து இந்த திரைப்படமும் 100 கோடி கிளப்பில் இணையும் என முன்பு கணிக்கப்பட்ட தற்போது அது நடந்து வருகிறது டான் திரைப்படம் உலக அளவில் பதினொரு நாளில் எவ்வளவு வசூல் செய்து உள்ளது என்பது குறித்த தற்போது தகவல் கிடைத்துள்ளது அதன்படி பார்வையில் சிவகார்த்திகேயனின் டான் படம் 98 கோடி அள்ளி புதிய சாதனை படைத்துள்ளதாக கூறப்படுகிறது. வருகின்ற நாட்களில் இன்னும் நிச்சயம் சில கோடிகளை அள்ளி 100 கோடி கிளப்பில் இணைந்த விடும் என கூறப்படுகிறது.

தொடர்ந்து சிவகார்த்திகேயனின் படங்கள் 100 கோடியை அசால்டாக தொட்டு வருவதால் அவரது சினிமா பயணம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே போகிறது சொல்லப்போனால் இன்னும் ஓரிரு திரைப்படங்களிலேயே நிச்சயமாக சிவகார்த்திகேயன் விஜய், அஜித்திற்கு நிகராக வந்து விடுவார் எனவும் பலர் கூறி வருகின்றனர்.