குருவுக்கு நன்றி என டான் பட இயக்குனர் யாரைக் கூரியுள்ளார் பார்த்தீர்களா.! வைரலாகும் ட்விட்.!

don

சிவகார்த்திகேயன் பிரியங்கா மோகன் எஸ் ஜே சூர்யா சமுத்திரக்கனி, சூரி, சிவாங்கி, ராஜி ஜெயமோகன், ஆர்ஜே விஜய், முனீஸ் காந்த், பாலா சரவணன்,  ராதாரவி,  காளி வெங்கட்,  ஆகியோர் நடிப்பில் வெளியாகிய திரைப்படம் தான் டான் இந்த திரைப்படம் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. படத்தை இயக்குனர் சிபி சக்கரவர்த்தி என்பவர் தான் இயக்கியுள்ளார்.

அனிருத் இசையில் உருவாகியுள்ள இந்தப் திரைப்படத்தின் பாடல்கள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது மேலும் படத்தை லைகா புரொடக்ஷன் மற்றும் சிவகார்த்திகேயன் புரட்க்ஷன்  இருவரும் இணைந்து தயாரித்துள்ளார்கள் இந்தநிலையில் இந்த திரைப்படத்தை பிவிஆர் பிக்சர்ஸ் ரெட் ஜெயன்ட் மூவிஸ் இருவரும் இணைந்து வெளியிட்டுள்ளார்கள்  40 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்தத் திரைப்படம் இரண்டே நாட்களில் 34 கோடி வரை வசூல் செய்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

டான் திரைப்படம் திரையரங்கில் ஓடிக்கொண்டிருக்கிறது  இந்த திரைப்படத்திற்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது அதுமட்டுமில்லாமல் பாக்ஸ் ஆபீசிலும் நல்ல கலெக்ஷன் வந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் திரைப்படத்தின் இயக்குனர் சிபி சக்கரவர்த்தி இதற்குமுன் அட்லியின் உதவி இயக்குனராக பணியாற்றி வந்தவர் என்பது தற்பொழுது தெரியவந்துள்ளது.

don
don

நேற்று அட்லி தன்னுடைய சிஷ்யனின் முதல் திரைப்படத்தின் வேலையை பார்த்து பாராட்டி உள்ளார் அட்லி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் டான் ஏமோஷனல் ஃபேமிலி என்டர்டெய்னர் அறிமுக இயக்குனருக்கு வாய்ப்பு கொடுத்ததற்கு மிகவும் நன்றி உங்களை நினைத்து மிகவும் பெருமையாக இருக்கிறது என கூறியுள்ளார்.

இதைப்பார்த்த அட்லீயின் உதவி இயக்குனர் சிபிசக்கரவர்த்தி தன்னுடைய ட்விட்டரில் எனது குரு அட்லி அய்யா அவர்களுக்கு மிகவும் நன்றி உங்கள் பாராட்டு எனக்கு மிகவும் பொருள் தான் மிக்க மகிழ்ச்சியை வார்த்தையால் வெளிப்படுத்த முடியவில்லை என பதில் டிவிட் போட்டுள்ளார்.

இந்த தகவல் சமுக வலைதளத்தில் வைரலாகி வருகிறது மேலும் டான் திரைப்படம் பாக்ஸ் ஆபிசில் சாதனை படைக்கும் என  பலரும் கூறி வருகிறார்கள்.