நடிகர் சிவகார்த்திகேயன்னிடம் உண்மையை மறைத்த “டான்” பட இயக்குனர்.! விழாவில் ரகசியத்தை சொன்ன உதயநிதி.

don
don

அட்லி உடன் உதவி இயக்குனராக பணிபுரிந்த சிபிசக்கரவர்த்தி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் முதல் முறையாக கைகோர்த்து உருவாக்கிய படம் டான். இந்த படத்தில் சிவகார்த்திகேயனுடன் இணைந்து எஸ் ஜே சூர்யா, சமுத்திரகனி, பிரியங்கா அருண் மோகன், சிவாங்கி போன்ற பலரும் நடித்திருந்தனர்.

படம் கல்லூரி கலாட்டா, காதல், சென்டிமென்ட் போன்ற அனைத்தும் கலந்த படமாக உள்ளதால் அனைத்து தரப்பட்ட மக்களையும் வெகுவாக கவர்ந்து இழுத்து உள்ளது. படம் வெளிவந்த மூன்று வாரங்களே ஆகின்ற  நிலையில் 100 கோடிக்கு மேல் வசூலை அள்ளி புதிய சாதனையை படைத்து படம் ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த நிலையில் சமீபத்தில் டான் படத்தின்  வெற்றி விழா நடைபெற்றது.

அதில் பேசிய உதயநிதி ஸ்டாலின் இந்த படத்தை பற்றி பல உண்மைகளை கூறினார் அதில் அவர் கூறியது, நாங்கள் ஒரு நான்கு பேர் (ரெட் ஜெயன்ட் ) இந்த படத்தை முதலில் பார்த்தோம் படத்தின் முதல் பாதி நகைச்சுவையாக இருந்தது அடுத்த பாதி அப்பா-மகன் செண்டிமெண்ட் மிக உணர்வு பூர்வமாக இருந்தது. இதனால் இந்த படம் சிறப்பாக ஓடும் ரசிகர்கள் பலரும் படத்தை தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடுவார்கள் என்று சொல்லி இருந்தேன்.

அதைப்போலவே தற்போது நடந்தது. இந்த நேரத்தில் படத்தின் இன்னொரு உண்மையை சொல்கிறேன் சிபிசக்கரவர்த்தி முதலில் இந்த படத்தின் கதையை முதலில் என்னிடம் தான் கூறினார் கதை எனக்கு பிடித்திருந்தது ஆனால் ஸ்கூல் பையன் போன்ற கெட்டப்பில் என்னால் நடிக்க முடியாது.

மேலும் அப்பா-மகன் செண்டிமெண்ட் எனக்கு வந்து இருக்காது என்பதால் இந்த படத்தை வேண்டாம் என்று சொல்லிவிட்டேன் எனக் கூறினார் பின்பு சிவகார்த்திகேயன் பேசும்போது உதய் சார் உங்களுக்கு கதை சொன்னதை என்னிடம் இயக்குனர் சொல்லவே கிடையாது மற்ற ஹீரோக்களுக்கு கதை சொன்னதைதான் கூறியிருந்தார் எனவும் சிவகார்த்திகேயன் கூறினார்.