25 நாட்கள் முடிவில் “டான்” படம் எந்தெந்த ஏரியாவில் எவ்வளவு வசூல் செய்தது தெரியுமா.? வெளிவந்த ரிப்போர்ட்.!

don
don

தமிழ் சினிமாவில் நடிக்கத் தொடங்கிய குறுகிய காலகட்டத்திலேயே ரசிகர்கள் மத்தியில் அதிக அளவு பாப்புலரான நடிகர் சிவகார்த்திகேயன். இவர் முதலில் சின்னத்திரை நிகழ்ச்சிகளில் பணியாற்றி வந்தார் பின்பு ஒரு கட்டத்தில் இவருக்கு சினிமாவில் ஹீரோவாக நடிக்க வாய்ப்பு கிடைத்தது.

அதை சரியாக பயன்படுத்திக் கொண்டு சிவகார்த்திகேயன் நடிக்கும் ஒவ்வொரு படங்களும் காமெடி கலந்த படமாக இருப்பதால் பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை இவரது படங்களை விரும்பிப் பார்த்து வந்தனர். அந்தவகையில்  கடைசியாக நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன்.

நடிப்பில் வெளிவந்த டாக்டர் திரைப்படம் மக்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனங்களை பெற்று 100 கோடிக்கு மேல் வசூலை வாரிக் குவித்தது. இது சிவகார்த்திகேயன் கேரியரில் முக்கிய படமாகப் பார்க்கப்பட்டது. இந்த படத்தை தொடர்ந்து சமீபத்தில் அறிமுக இயக்குனர் சிபிசக்கரவர்த்தி இயக்கத்தில் வெளிவந்த டான் திரைப்படமும் அவருக்கு ஏகபோக வரவேற்பை பெற்றுத்தந்தது.

இவரது இந்த படமும் 100 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி தொடர்ந்து இவர் நடித்து வரும் படங்கள் ஒவ்வொன்றும் 100 கோடிக்கு மேல் வசூலை அள்ளுவதால் தமிழ் சினிமாவில் வசூல் மன்னனாக மாறி வருகிறார் சிவகார்த்திகேயன். இந்த நிலையில் டான் திரைப்படம் 25 நாட்கள் முடிவில் எவ்வளவு வசூலித்தது என்பது குறித்து பார்ப்போம்.

தமிழ்நாடு ரூபாய் 85.70 கோடி, வெளிநாடு ரூபாய் 25 கோடி, ஆந்திரா ரூபாய் 6.70 கோடி, கர்நாடகா ரூபாய் 5.95 கோடி, கேரளா ரூபாய் 1.75 கோடி, வடமாநிலம் ரூபாய் 7.70 கோடி. மொத்தமாக டான் திரைப்படம் 25 நாள் முடிவில் 125.80 கோடி வசூலித்துள்ளது.