தமிழ் சினிமாவில் ஏ. ஆர். முருகதாஸ் குறைந்த திரைப்படங்கள் எடுத்திருந்தாலும் அந்த திரைப்படங்கள் ஒவ்வொன்றும் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்ததால் தற்போது ஏ ஆர் முருகதாஸ் முன்னணி இயக்குனர் என்ற அந்தஸ்தை பெற்று வலம் வருகிறார் இதனால் தனது சம்பளத்தை கூட பல மடங்கு உயர்த்தியுள்ளார்.
இப்படி வெற்றியை நோக்கி ஓடிக் கொண்டிருந்த ஏ ஆர் முருகதாஸ் கடைசியாக ரஜினியை வைத்து தர்பார் என்ற திரைப் படத்தை எடுத்திருந்தார் இந்த திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியைத் தரவில்லை மற்றும் ஒரு சில படங்கள் மற்ற படங்களுடன்ஒத்து போனதால் தற்போது சிக்கியதால் ஏஆர் முருகதாஸின் மார்க்கெட் சரிந்துள்ளது.
மேலும் டாப் நடிகர்கள் யாரும் ஏ ஆர் முருகதாஸ் படத்தில் நடிக்க ஆர்வம் காட்டாததால் தற்போது தமிழை தாண்டி பிற மொழிகளிலும் படையெடுக்க தொடங்கி உள்ளார் ஏ ஆர் முருகதாஸ். 2014 ஆம் ஆண்டு இவர் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான துப்பாக்கி திரைப்படம் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்த தொடர்ந்து அதன் இரண்டாம் பாகத்தை எடுக்க அதிக ஆர்வம் காட்டினார்.
ஆனால் தற்போது விஜயோ தொடர்ந்து மற்ற இயக்குனர்கள் படங்களில் நடிப்பதால் ஏ ஆர் முருகதாஸை தவிர்த்துள்ளார் இதை உணர்ந்துகொண்ட ஏ ஆர் முருகதாஸ்சும் தற்போது விஜய்யை வேண்டாம் என்று உதறித் தள்ளிவிட்டு துப்பாக்கி 2 கதையை ரெடி செய்து தற்போது கமலுக்கு கொடுக்க ரெடியாக இருக்கிறார் அரச புரசலாக கூறுகின்றனர்.
ஆனால் கமல் இதுவரை இரண்டாம் பாகத்தில் பல்வேறு படங்களில் நடித்திருந்தாலும் அந்த படங்கள் வெற்றி பெறாமல் இருந்து வந்துள்ளன மேலும் இந்தியன் 2 படமும் தற்போது எடுக்க முடியாமல் திக்குமுக்காடி வருகிறது. அதனால் கமலுக்கு இந்த படத்தை கொடுத்தால் இந்த படமும் ஹிட் அடிக்குமா அடிக்காதா என்ற கேள்வி தற்போது ரசிகர்கள் மனதில் தோன்றி உள்ளது.
இருப்பினும் விஜயை வைத்து இந்த படத்தை எடுக்காமல் வேறு ஒரு நடிகரை வைத்து எடுக்க ஏ ஆர் முருகதாஸ் அதிகம் ஆர்வம் காட்டி வருகிறார்.