சினிமாவுலகில் நடிகர் அஜித்தை வைத்து முன்னேறிய பல பிரபலங்கள் தற்போது தமிழ் சினிமாவில் தொடமுடியாத உச்சத்தை எட்டி உள்ளனர். அந்த வகையில் அஜித்தை வைத்து தொடர்ந்து நான்கு சூப்பர் டூப்பர் ஹிட் படங்களை கொடுத்து அதன் விளைவாக தற்போது தமிழ் சினிமாவில் அசைக்க முடியாத இயக்குனராக மாறியுள்ளார் சிறுத்தைசிவா இவர் தற்போது ரஜினியுடன் கைகோர்த்து அண்ணாத்த என்ற திரைப்படத்தை எடுத்துள்ளார்.
படப்பிடிப்பு ஒருவழியாக முடிவடைந்ததைத் தொடர்ந்து இந்த படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. ஸ்டார் ரஜினிகாந்த் பல வருடங்கள் கழித்து மீண்டும் கிராமத்து கதையில் நடித்துள்ளதாக கூறப்படுகிறது. அவருக்கு நல்லதொரு உத்வேகத்தை கொடுத்துள்ளது இந்த படம். நிச்சயம் மக்களையும் ரசிகர்களை குஷிப்படுத்தும் என அவரது நம்பிக்கையாக இருந்து வருகிறது இந்த படத்தில் அவருடன் இணைந்து மீனா, குஷ்பு, கீர்த்தி சுரேஷ், நயன்தாரா, சதீஷ், சூரி, பிரகாஷ்ராஜ், வேலராமமூர்த்தி போன்ற பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.
படம் வருகின்ற தீபாவளியை குறி வைத்துள்ளதால் ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர் அதற்கு முன்பாகவே ரசிகர்களை சந்தோஷப்படுத்த சில தினங்களுக்கு முன்பு இந்தப் படத்தின் மோஷன் போஸ்டர் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ஆகியவை வெளியாகின. இதில் ரஜினி வேட்டி சட்டையில் பட்டன்கள் ஏற்படுவதோடு புல்லட்டில் ரஜினி வீச்சு அருவாளை வைத்துக்கொண்டு வந்த புகைப்படமும் ரசிகர்களை சந்தோஷப்படுத்தின.
இந்தநிலையில் ரஜினிகாந்தின் பிஆர்ஓ ரியாஸ் அகமது அந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் குறித்து தனது கருத்துக்களை கூறி வருகிறார். பட்டு வேட்டி சட்டையில் ரஜினி போஸ் கொடுத்தது சூப்பராக இருக்கிறது ஒரு ஃபேமிலி சப்ஜெக்ட் படமாக இருக்கும் என எதிர்பார்க்கிறேன் நிச்சயமாக கலகலப்பாய் இருக்கும்.
எனக்கு படையப்பா மாதிரி ஒரு எதிர்பார்ப்பு இருக்கும் கொஞ்சம் முத்து போல ஒரு எதிர்பார்ப்பு இருக்கு ஒரு பக்கம் ஆறிலிருந்து அறுபது வரை எல்லாம் கலந்து இருக்கிற படம் மாதிரி தெரியுது ஒரு பக்கம் தர்மம் இத மாறிவிடுகிறது ஒரு பக்கம் புதுக்கவிதை தெரிகிறது என கூறி அசத்தினார். மேலும் கீர்த்தி சுரேஷ் இந்த திரைப்படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடிக்க வாய்ப்பே இல்லை சகோதரியாக இருக்கலாம் அல்லது மகளாக இருக்கலாம் எனவும் நயன்தாரா இருக்கும்போது கீர்த்தி சுரேஷ் ஜோடியாக இருக்க முடியாது எனவும் கூறினார்.
அண்ணன் தங்கை கேரக்டர் ரஜினிகாந்துக்கு நல்லா செட் ஆகும் அப்படிப் பார்த்தால் கவிகுயில் மற்றும் முள்ளும் மலரும் படங்கள் தான் எனது நினைவுக்கு வருகிறது இந்த தீபாவளிக்கு வலிமை படம் ரிலீஸ் ஆகுமா என்ற கேள்வியும் அவரிடம் எழுப்பப்பட்டது எனக்கு தெரிந்து வலிமை படம் ரிலீஸ் ஆக வாய்ப்பே இல்லை இரண்டு படங்களும் ஜெயிக்க வேண்டும் என கூறினார்.