சினிமா கேரியரில் குறைந்த படங்களில் நடித்தாலும் அது ஒவ்வென்றும் வித்தியாசமானவும், மாறுபட்ட திரைபடங்களாக கார்த்தி சினிமாவில் உச்சத்தில் நடித்து வருகிறார்.
அந்தவகையில் பருத்திவீரன், கைதி போன்ற படங்கள் இவருக்கு மாபெரும் வெற்றியைப் பெற்று கொடுத்தன. மேலும் இந்த படங்கள் அவரது கேரியரில் பெஸ்ட் படமாக அமைந்தது இதை தொடர்ந்து அவர் பொன்னின் செல்வன் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார் இதில் மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்பதால் இதில் அவரது நடிப்பு வேற லெவல் இருக்கும் என கூறப்படுகிறது.
இப்படி இருக்க இவர் லோகேஷ் கனகராஜ் உடன் இணைந்து ஹிட் கொடுத்த கைதி படம் மாபெரும் வசூல் வேட்டை நடத்திய நிலையில் தற்போது இதன் இரண்டாம் பாகத்தை எடுக்க வேண்டும் என அப்போது ரசிகர்களும் சினிமா சார்ந்த பிரபலங்கள் பலரும் கூறி வந்தனர் ஆனால் அதற்குள் லோகேஷ் கனகராஜ் விஜயுடன் இணைந்து மாஸ்டர் தற்போது கமலுடன் இணைந்து விக்ரம் ஆகிய தொடங்கும் படங்களில் பிசியாக போனதால் இந்த படத்திற்கான எதிர்பார்ப்பு அப்போது காணாமல் போனது.
கைதி இப்படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க கார்த்தி பெருமளவு ஆர்வம் காட்டுகிறார்கள் இல்லையோ அந்தப் படத்தில் பணியாற்றிய படக்குழு மற்றும் தயாரிப்பாளர் அதிகம் ஆர்வம் காட்டுகின்றனர். அந்தவகையில் கார்த்தியின் ஆஸ்தான தயாரிப்பாளர் எஸ் ஆர் பிரபு மீண்டும் இரண்டாம் பாகத்தை தயாரிக்க அதிக ஆர்வம் காட்டுகிறார்.
மேலும் இந்த திரைப் படத்திற்கான கதை விவாதம் தற்போது நடைபெற்று வருவதாகவும் அதற்கான வேலைகள் வெகு விரைவிலேயே தொடங்க உள்ளது என தயாரிப்பாளர் தெரிவித்துள்ளார். இதனால் கைதி 2 படத்திற்கான எதிர்பார்ப்பு தற்போது உச்சத்தை தொட்டுள்ளது மேலும் இது விரைவிலேயே கார்த்திக்கு இன்னொரு பிளாக்பஸ்டர் படமாக இது அமையும் என கூறப்படுகிறது.
இந்த திரைப்படம் எப்போது தொடங்கும் என்பதுதான் தற்போதைய கேள்வி குறியாக இருக்கிறது ஆனால் தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களாக இருக்கும் விஜய், கமல் ஆகியோரும் படங்களை லோகேஷ் முடித்த பிறகு இவர் இந்த படத்தில் இணைவதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாக கூறப்படுகிறது.