என்னடா சொல்றீங்க.. சமந்தாவுக்கு இத்தனை வழியில் காசு வருகிறதா.? சினிமா அவருக்கு ஒரு சைடு பிசினஸ் தான்

samantha

தென்னிந்திய சினிமா உலகில் தவிர்க்க முடியாத ஒரு நடிகை சமந்தா. இவர் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் உள்ள டாப் ஹீரோ படங்களில் நடித்து வருவதால் இவரது மார்க்கெட் நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே இருக்கிறது. சாகுந்தலம் திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து சமந்தா நடித்து வரும் திரைப்படம் குஷி..

இந்த படம் பெரிய அளவில் எதிர்பார்க்கப்படுகிறது திரை உலகில் வெற்றி நடிகையாக ஓடும் சமந்தா பற்றி நமக்குத் தெரியாத சில விஷயங்களைப் பற்றி தான் பார்க்க இருக்கிறோம்.. நடிகை சமந்தாவுக்கு 36 வயது ஆகிறது. அவருடைய சொத்து மதிப்பு சுமார் 101 கோடி இருக்கும் என கூறப்படுகிறது ஒரு படத்திற்கு சுமார் ஐந்து கோடிக்கு மேல்   சம்பளம் வாங்குகிறார்.

நடிகை சமந்தா ரியல் எஸ்டேட்டிலும் நிறைய முதலீடு செய்து இருக்கிறார் ஹைதராபாத், மும்பை உள்பட பல இடங்களில் அவருக்கு வீடு உள்ளது. மேலும் சமந்தாவுக்கு பிஎம்டபிள்யூ 3 சீரிஸ், ஜாகுவார் XFR, பிஎம்டபிள்யூ  X5 உட்பட ஏராளமான கார்கள் இருக்கின்றன. சூப்பர் ஃபுட் நிறுவனத்தில் முதலீடு செய்து உள்ளார்.

இதன் மூலம் நடிகை சமந்தாவுக்கு ஆண்டுதோறும் இரண்டு மில்லியன் டாலர் காசு வருகிறது. Saaki என்னும் பேஷன் பிராண்டையும் சொந்தமாக வைத்திருக்கிறார். அதன் மூலமும் நல்ல காசு வருகிறது. சஸ்டெயின் கார்ட் என்னும் இ காமர்ஸ்  நிறுவனம் மற்றும் மிவி பிராண்ட் ஆகியவற்றின் விளம்பர தூதராகவும் சமந்தா இருக்கிறார்.

பெப்சி உள்படை ஏராளமான விளம்பரங்களில் நடித்து வருகிறார் அதன் மூலமும் நல்ல வருமானம் வருகிறது இது போதாத குறைக்கு இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விளம்பரம் செய்ய ஒரு பதிவு இருக்கு சுமார் 20 லட்சம் வரை சம்பளம் வாங்குகிறார் இப்படி சமந்தா பற்றி நாம் அறியாத பல தகவல்கள் இன்னும் இருக்கிறது.