தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக வலம் வந்து கொண்டிருப்பவர் கே எஸ் ரவிகுமார் இவர் தமிழ் சினிமா துறையில் இயக்குனராகவும், நடிகராகவும் தனது பயணத்தை தொடர்ந்து வருகிறார். 1990ஆம் ஆண்டு புரியாத புதிர் என்ற திரைப்படத்தை இயக்கியதன் மூலம் சினிமாவுலகில் இயக்குனராகத் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டார்.
இதனைத் தொடர்ந்து அவர் சேரன் பாண்டியன், ஊர் மரியாதை, முத்து, அவ்வை சண்முகி,, படையப்பா, பஞ்சதந்திரம், சமுத்திரம், சுயம்வரம், மின்சார கண்ணா, தெனாலி போன்ற பல வெற்றிப் படங்களை இயக்கி தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு நிலையான இடத்தை பிடித்தார் மேலும் அத்தகைய படங்களின் மூலம் மற்ற இயக்குனர்களுக்கு சவால் விட்டார் கே எஸ் ரவிக்குமார்.
இவர் இயக்கிய படங்கள் திரையில் வெளிவந்து மிகப்பெரிய வசூல் சாதனை படைத்தது அந்தவகையில் இவர் 1994 ஆம் ஆண்டு தமிழ் நாட்டாமை என்ற திரைப்படத்தை இயக்கி இருந்தார் இத்திரைப்படம் வெளிவந்து மிகப்பெரிய வசூல் சாதனை படைத்தது இப்படத்தில் சரத்குமார் ஹீரோவாக நடித்திருந்தார் இவருடன் இணைந்த குஷ்பு, மீனா, மனோரமா,விஜய குமார் போன்ற பல நட்சத்திர பட்டாளங்கள் நடித்திருந்தனர்.
இந்த நிலையில் இப்படத்தைப் பற்றிய ஒரு சுவாரஸ்யமான தகவல் ஒன்று வெளியாகியுள்ளது இப்படத்தில் நடிகர் சரத்குமார் நடித்த கதாபாத்திரத்தில் முதலில் நடிக்க மலையாள சூப்பர்ஸ்டார் நடிகரான மம்முட்டியுடன் பேசப்பட்டது ஆனால் அவர் இதில் கமிட்டாகவில்லை இதேபோல விஜயகுமார் நடித்த பெரிய நாட்டாமை கதாபாத்திரத்தில் முதலில் பாரதிராஜாவிடம் தான் பேசப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
இப்படம் தமிழில் மிகப்பெரிய வசூல் சாதனை அடைந்தது. இதனையடுத்து இப்படத்தை பிற மொழிகளில் ரீமேக் செய்தனர் இதில் தெலுங்கு ரீமேக்கில் பெரிய நாட்டாமையாக சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
வீடியோ இதோ.