“விக்ரம்” படத்தில் கமலுக்கு ஜோடி உண்டா.? இல்லையா.? வெளியான பரபரப்பு தகவல்.

kamal
kamal

உலகநாயகன் கமலஹாசன் பல்வேறு தடைகளைத் தாண்டி ஒரு வழியாக மீண்டும் சினிமாவில் நடிக்க ஆரம்பித்து விட்டார். முதலாவதாக லோகேஷ் கனகராஜ் உடன் கை கோர்த்தது விக்ரம் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார் இந்த திரைப்படத்தை தொடர்ந்து பல்வேறு இயக்குனர்களிடம் கதை கேட்டு இருப்பதால் அடுத்தடுத்த படங்களில் இணைய இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கமல் விக்ரம் திரைப்படத்தை மிகப்பெரிய அளவில் எதிர்நோக்கி இருக்கிறார் என்றால் அந்த அளவிற்கு இந்த படம் ஒரு வித்தியாசமான திரைப்படமாக உருவாகி வருகிறது மேலும் அதே சமயம் ஆக்ஷன் படம் என்பதும் தெரியவந்து உள்ளது ஏனென்றால் கமலுடன் கைகோர்த்து விஜய் சேதுபதி பகத் பாசில் போன்ற டாப் நடிகர்கள் வில்லன் கதாபாத்திரத்தில் நடிப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

போதாத குறைக்கு ஷிவானி நாராயணன் மகேஸ்வரியும் இந்த திரைப்படத்தில் நடிப்பதால் சற்று கவர்ச்சியாக இருந்தாலும் இருக்கும் என ரசிகர்களின் கருத்தாக இருக்கிறது அதனால் படத்திற்கான எதிர்பார்ப்பு தற்போது மக்கள் மத்தியில் அதிகரித்துள்ளது சமீபத்தில் இந்த படத்தின் கிளான்ஸ் வீடியோ வெளியாகி வைரல் ஆனது.

இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துவர்களின் முகங்கள் வெளியே காட்டப்பட்டு   வருகின்றன இப்படி இருக்கின்ற நிலையில் ரசிகர்கள் முதல் கேள்வி என்னவென்றால்  இந்த திரைப் படத்தில் கமலுக்கு ஜோடி இருக்கிறதா இல்லையா என்பது தான் ஏனென்றால் அது குறித்து இதுவரை எந்த ஒரு தகவலும் வெளியாகி இருக்கிறது ஆனால் உண்மையில் சொல்லப்போனால் இந்த படத்தில் முக்கியமாக ஹீரோயின் கதாபாத்திரம்தான் படமே அவரை வைத்து தான் நகர்த்துவது போல தெரிகிறது.

மேலும் ஒரு முன்னணி நடிகை தான் கமலுக்கு ஜோடியாக நடிக்க இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன ஆனால் அதை படக்குழு வெளியிடாமல் சைலண்டாக மறைத்து வைத்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த படத்தின் சூட்டிங் பாண்டிச்சேரி மற்றும் சென்னை ஆகிய இடங்களில் படமாக்கப் பட்டு வந்த நிலையில் மூன்று கட்ட படப்பிடிப்பு வெற்றிகரமாக முடிந்தது நான்காவது கட்ட படப்பிடிப்பை சென்னையில் தொடங்க இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன மேலும் வெகு விரைவிலேயே படத்தை முடித்துவிட்டு போஸ்ட் புரமோஷன் வேலைகளில் கை வைக்கப் போகிறது விக்ரம் பட குழுவினர்.