உங்க வீட்டுப் பெண்களைப் பற்றிப் பேசியதும் உனக்கு வலிக்கிறது என்னை பற்றி பேசும் போது இனிக்கிறதா..? சந்திர பாபுவை சரியான கேள்வி கேட்ட ரோஜா..!

roja-11

தற்போது ஆந்திர மாநிலத்தில் எதிர்கட்சி தலைவராக இருந்து வருபவர் தான் சந்திரபாபு நாயுடு. இவர் சமீபத்தில் பத்திரிகையாளர்களிடம் பேசிய பொழுது தன் மனைவியை பற்றி ஆளுங்கட்சியினர்கள் அவதூறாக பேசியதாக  கூறி கண்ணீர் வடித்துள்ளார்.

முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவின் மனைவி என் டி ராமாராவ் மகள் என்பது நம் அனைவருக்குமே தெரிந்த விஷயம் தான் அந்தவகையில் சந்திரபாபு சமீபத்தில் கண்ணீர்விட்டு கதறிய காட்சி சமூக வலைதள பக்கத்தில் மிக வைரலாக பரவி அது மட்டுமில்லாமல் இது குறித்து பிரபல நடிகை மற்றும் அரசியல்வாதியான ரோஜா ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அப்போது அவர் கூறியது என்னவென்றால் சந்திரபாபுநாயுடு சட்டசபையில் என்னை பற்றி மிக தவறாகவும் தப்பாகவும் பலமுறை பேசி உள்ளார் அதுமட்டுமில்லாமல் நான் ஆபாச படத்தில் நடிப்பதாக கூறி செய்தி ஒன்றையும் சட்டசபை கூட்டத்திற்கு எடுத்து வந்தார் இதனால் சட்டசபைக்கு ஓராண்டுக்கு மேலாக என்னால் வர முடியாமல் போய்விட்டது.

ஆனால் தற்போது உங்களை பற்றியும் உன் குடும்ப பெண்களை பற்றியும் தவறாக பேசும் பொழுது நீங்கள் நீலிக் கண்ணீர் விட்டு கதறி வருகிறீர்கள் உங்கள் வீட்டில் இருப்பவர்கள் மட்டும்தான் பெண்களா. நாங்கள் எல்லாம் பெண்கள் கிடையாதா என்று கேள்வி எழுப்பியது மட்டுமல்லாமல்.

உங்களுக்கு ஒரு நியாயம் எங்களுக்கு ஒரு நியாயமா என ரோஜா பேசியுள்ளார். மேலும் நீங்கள் இனிமேல் சட்டசபைக்கு வரவே முடியாது அதுமட்டுமில்லாமல் விதி யாரையும் சும்மா விடாது என ரோஜா  தெரிவித்துள்ளார்.

roja-11
roja-11

அதுமட்டுமில்லாமல் சந்திரபாபுநாயுடு அடுத்த தேர்தலில் என் கட்சி வெற்றி பெறும் வரை நான் சட்டசபைக்கு வரவே மாட்டேன் என சபதம் எடுத்துள்ளாராம். இன் நிலையில் ரோஜா  இனிமேல் நீங்கள் ஜெயிக்கவே மாட்டீர்கள் என்பதை குறிப்பிட்டு கூறும் வகையில் நீங்கள் இனிமேல் சட்ட சபைக்கு வரவே முடியாது என தெரிவித்துள்ளார்.