மலையாள சினிமாவில் தொடர்ந்து சிறப்பான படங்களில் நடித்து பிரபலமடைந்தவர் பிரியங்கா அருள்மோகன் தமிழில் இவர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான டாக்டர் என்ற திரைப்படத்தில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி பிரபலமானார் முதல்படமே இவருக்குப் பெயரையும், புகழையும் பெற்றுத்தந்தது.
அந்த திரைப்படத்தை தொடர்ந்து தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருக்கும் சூர்யாவுடன் கை கோர்க்க எதற்கும் துணிந்தவன் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். திரைப்படத்திற்கு முன்பாகவே மீண்டும் ஒரு முறை சிவகார்த்திகேயனுடன் கைகோர்த்து டான் என்ற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் சினிமாவில் தற்போது பிரியங்கா அருள் மோகன் சினிமா பயணம் மிக சிறப்பாக இருக்கிறது ஏற்கனவே டாக்டர் திரைப்படம் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்ததை தொடர்ந்து எதற்கும் துணிந்தவன் திரைப்படம் மிகப்பெரிய ஹிட் அடிக்கும் படத்தில் தனது சம்பளத்தை உயர்த்த நேரடியாக இருப்பதாக கூறப்படுகிறது இப்படி இருக்கின்ற நிலையில் சிவகார்த்திகேயன் தமிழ் சினிமாவையும் தாண்டி தெலுங்கு சினிமாவில் தற்போது காலடி எடுத்து வைக்க ரெடியாக இருக்கிறார்.
இயக்குனர் அனுதீப் இயக்கத்தில் தெலுங்கு படத்தில் நடிக்க இருக்கும் சிவகார்த்திகேயன் படத்தில் நடிக்க எந்த ஒரு முன்னணி நடிகையும் ஒத்து வராததால் சிவகார்த்திகேயனுடன் ஏற்கனவே ஜோடி போட்ட பிரியங்காவிடம் பேசலாம் என முனைப்பு காட்டியது.
ஆனால் பிரியங்காவும் எதற்கும் துணிந்தவன் திரைப்படம் ஹிட் அடிக்கும் பட்சத்தில் தனது சம்பளத்தை உயர்த்த இருப்பதால் தற்போது இந்த திரைப்படத்தில் நடிப்பதை தவிர்த்து உள்ளாராம். யார் படமாக இருந்தால் என்ன சிவகார்த்திகேயன் படமாக இருந்தாலும் சரி எனக் கூறி படத்தை தற்போது தவிர்த்துவிட்டு இருக்கிறாராம். அவர் தற்போது எதற்கும் துணிந்தவன் திரைப்படம் ஹிட் அடிக்க வேண்டும் என்பது தானாம்.