நல்ல கதை களம் ஒரு நடிகரை வேற லெவலுக்கு உயர்த்தும் அதை சரியாக புரிந்து கொண்டு நடித்து வருபவர் சிவகார்த்திகேயன். சமிபத்தில் கூட சினிமாவில் காமெடி திரைப்படங்களை எடுத்து கொடுத்து வந்த நெல்சன் திலீப்குமார் உடன் கைகோர்த்து டாக்டர் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார்.
இத் திரைப்படம் ஒரு ஆக்ஷன் திரைப்படமாக இருக்கும் என ஆரம்பத்தில் எதிர்பார்க்கப்பட்டது.ஆனால் திரையரங்கில் நடந்த விதம் தான் வேற ஏனென்றால் இந்த திரைப்படம் முழுக்க முழுக்க காமெடியை கொடுத்திருந்தது. இந்த திரைப்படம் திரையரங்கில் 9ஆம் தேதி வெளியாகி இருந்தாலும் அன்றிலிருந்து தற்போது வரையில் மக்கள் கூட்டத்தை அலை அலையாக இழுத்து வருகிறது.
மேலும் படத்தை பார்த்த பிரபலங்கள் தொடங்கி மக்கள் வரை தனது சமூக வலைதளப் பக்கத்தில் இந்த படத்தின் கருத்து குறித்து நல்லவிதமாகவே தான் சொல்லி வருகின்றனர்.மேலும் முதல் நாளே இந்த படம் சுமார் ஆறு கோடிக்கு மேல் வசூல் வேட்டை செய்து அசத்திய அன்றிலிருந்து பல முன்னணி நடிகர்களின் படங்களின் வசூல் வேட்டையை ஓவர்டேக் செய்து முன்னேறிக்கொண்டே இருக்கிறது.
அண்மையில்கூட தளபதி விஜயின் மாஸ்டர் திரைப்படத்தின் வசூலை தட்டி தூக்கிய நிலையில் தற்போது தனுஷின் கர்ணன் படத்தின் வசூலே முந்தி விட்டதாக கூறப்படுகிறது முதல் வாரத்தில் 25 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்தது டாக்டர் அதை தொடர்ந்து இரண்டாவது வாரத்தில் 35 கோடிக்கு மேல் வசூல் வேட்டை நடத்தி உள்ளதாக கூறப்படுகிறது.
இப்படியே போய்க் கொண்டிருந்தால் மிகப்பெரிய வசூல் வேட்டையை காணும் என பலரும் கூறி வருகின்றனர் மேலும் சிவகார்த்திகேயன் கேரியரில் இது ஒரு மிகப்பெரிய பிளாக்பஸ்டர் படம் எனவும் கூறி வருகின்றனர்படத்தின் மூலம் சிவகார்த்திகேயன் தொடமுடியாத உச்சத்தை எட்டி உள்ளார் என கூறி பாராட்டி வருகின்றனர்.