சமீபகாலமாக பல்வேறு திரைப்படங்கள் உருவாகியே சூப்பர் டூப்பர் ஹிட் அடிக்கின்றன ஆக்சன், பேய் போன்ற திரைப்படங்களை தொடர்ந்து காமெடி படங்களுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்று வருகிறது மக்களின் மனநிலை சரியாக புரிந்துகொண்டு நெல்சன் இயக்கும் ஒவ்வொரு படமும் ஹிட் தான்.
சமிபத்தில் சிவகார்த்திகேயனை வைத்து டாக்டர் என்னும் சூப்பர் காமெடி படத்தை கொடுத்தார் இந்த திரைப்படம் வெளிவந்த நாளில் இருந்து தற்போது வரையிலும் மக்கள் கூட்டத்தை அலை அலையாக கவர்ந்திழுத்து வருகிறது. இதனால் திரை அரங்க உரிமையாளர்கள், விநியோகஸ்தர்களும் சந்தோஷத்தில் இருப்பதோடு லாபத்தை அள்ளி வருகின்றனர்.
டாக்டர் படம் முழுக்க முழுக்க காமெடியை மையப்படுத்தி இருந்தாலும் இந்த கதை களம் சிறிது நல்ல மெசேஜை சொல்வதால் மக்களுக்கு மேலும் பிடித்த படமாக இது அமைந்துள்ளது இந்த திரைப்படத்தில் சிவகார்த்திகேயன், பிரியங்கா மோகன், வினய், அருண் அலெக்சாண்டர், ரெடின் கிங்ஸ்லே, தீபா சங்கர், யோகி பாபு, அர்ச்சனா போன்ற பல நட்சத்திர பட்டாளங்கள் இந்த திரைப்படத்தில் நடித்து அசத்தி உள்ளனர்.
படம் இன்னும் பல நாட்கள் ஓடிய மிகப்பெரிய நல்ல வரவேற்பை பெறுவதோடு வசூல் வேட்டை நடத்தும் என கணிக்கப்பட்டுள்ளது. இப்படி இருக்கின்ற நிலையில் இந்த திரைப்படம் வெளியாகி எட்டு நாட்கள் மேலே ஆகியுள்ளது எட்டாம் நாள் நிலவரப்படி இந்த திரைப்படம் தமிழகத்தில் மட்டும் சுமார் 50 கோடிக்கு மேல் வசூல் செய்ததாக கூறப்படுகிறது.
ஒட்டுமொத்தமாக இந்த திரைப்படம் 60 கோடிக்கு மேல் இது வரை வசூலித்ததாக தகவல்கள் வெளிவந்துள்ளது இதனால் தற்போது படக்குழு செம்ம உற்சாகத்தில் இருக்கிறது. படத்தை சினிமா பிரபலங்களும் பார்த்து கொண்டாடி வருவதோடு மட்டுமில்லாமல் நல்ல விமர்சனத்தை கூறி பதிவிட்டு வருகின்றனர்.