கேரளாவிலும் வசூல் வேட்டை நடத்தும் “டாக்டர்” – இரண்டு நாட்களில் இதுவரை அள்ளிய தொகை எவ்வளவு தெரியுமா.?

doctor
doctor

சினிமா உலகில் காமெடியும் மிகப்பெரிய ஒரு வரவேற்பை பெறும் என்பதை நாம் அனைவரும் அறிந்த ஒன்று தான். இயக்குனர்களும் அவ்வபோது காமெடி கலந்த படங்களை கொடுத்து வருகின்றனர் ஆனால் காமெடி கதையே தொடர்ந்து கொடுத்து வெற்றி மேல் வெற்றியை குவித்து வருபவர் இயக்குனர் நெல்சன் திலிப்குமார்.

முதலில் நயன்தாரா, யோகி பாபுவை வைத்து கோலமாவு கோகிலா என்ற படத்தை காமெடி படத்தை கொடுத்திருந்தார் அதை தொடர்ந்து சிவகார்த்திகேயனை வைத்து  டாக்டர் என்ற திரைப்படத்தை கொடுத்துள்ளார்.  இத்திரைப்படம் யாரும் எதிர்பார்க்காத அளவிற்கு சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தது. மேலும் இப்போதும் மக்கள் கூட்டம் அலையாக திரையங்கில் வந்து பார்க்கின்றனர்.

இந்த திரைப்படம் தமிழ்நாட்டில் மட்டும் இதுவரை 90 கோடிக்கு மேல் வசூல் செய்து ஓடிக்கொண்டிருக்கிறது இன்னும் ஓரிரு நாளில் 100 கோடியைத் தொட்டுவிடும் என கூறப்படுகிறது இது சிவகார்த்திகேயன் கேரியரில் ஒரு முக்கிய படமாக அமைந்துள்ளது தற்போது கேரள மொழியில் டப் செய்யப்பட்டு அங்கேயும் ரிலீஸாகியுள்ளது கேரளாவில் மக்கள் வரவேற்பு அதிகரித்துள்ளது.

கேரளாவில் இரண்டு நாட்கள் ஆனது முதல் நாளில் மட்டும் 34 லட்சமும் இரண்டாவது நாளில் 32 லட்சம் பள்ளி உள்ளது இதுவரை 66 லட்சம் வசூலித்து நல்ல வரவேற்பை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படம் இன்னும் பல மொழிகளில் ஒளிபரப்பப்பட்டால் கூட செம ஹிட் அடிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது அந்த அளவிற்கு இந்த திரைப்படத்தில் காமெடி உள்ளது.

இத்திரைப்படத்தில் சிவகார்த்திகேயனுடன் இணைந்து யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி, அருண் அலெக்சாண்டர், அர்ச்சனா போன்ற ஒவ்வொருவரும் சிறந்த பங்களிப்பை கொடுத்து அசத்தி உள்ளது. டாக்டர் படம் இன்னும் கேரளாவிலும் தமிழ்நாட்டிலும் நல்ல வசூல் வேட்டை நடத்தி நல்ல இடத்தைப் பிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.