இணையத்தில் வெளியானது டாக்டர் திரைப்படத்தின் விமர்சனம்..! படத்தில் இப்படி ஒரு ட்விஸ்டா..?

doctor-4
doctor-4

doctor movie review viral in social media: தமிழ் திரை உலகில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் சிவகார்த்திகேயன் இவர் தற்போது பல்வேறு கஷ்டங்களையும் தாண்டி தன்னுடைய 18 வது திரைப்படத்தை உருவாக்கி உள்ளார் இந்த திரைப்படத்தின் டைட்டில் ஆனது டாக்டர் என வைக்கப்பட்டுள்ளது.

 இவ்வாறு உருவான இத்திரைப்படம் ஆனது எந்தவொரு திரைப்படத்திலும் போட்டி போடாமல் சோலோவாக தற்போது திரையரங்கில் வெளியாகி உள்ளன.  அந்த வகையில் இத் திரைப்படமானது திரையில் வெளியிடுவதற்கு முன்பாகவே இணையத்தில் நல்ல வசூலை பெற்று உள்ளதாக சமீபத்தில் செய்திகள் பரவின.

இந்நிலையில் இத்திரைப்படத்தைப் பற்றிய விமர்சனம் வெளியாகி உள்ளது. பொதுவாக ஒரு திரைப்படம் வெளியாக போகிறது என்றால் அந்த திரைப்படத்தை பார்ப்பதற்கு ரசிகர்களின் ஆர்வத்தை தூண்ட வேண்டும் இதனை இயக்குனர் நெல்சன் மிகவும் சிறப்பாக செய்தது மட்டும் இல்லாமல் பல சஸ்பென்ஸ் களையும் இத்திரைப்படத்தில் வைத்துள்ளார்.

அந்த வகையில் டாக்டர் திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியான பொழுது பல்வேறு ஆக்சன் காட்சிகள் நிறைந்த பயங்கரமான காட்சிகள் இந்த டீசரில் இடம்பெற்றிருந்தது ஆனால் தியேட்டரில் பார்த்தால் அதற்கு எதிர்மறையாக டாக்டர் திரைப்படம் அமைந்துவிட்டன.

doctor-3
doctor-3

குறிப்பிட்டு சொல்ல போனால் இத் திரைப்படமானது குடும்பத்துடன் பார்க்க வேண்டிய ஒரு ஆக்ஷன் மற்றும் காமெடி கலந்த திரைப்படமாக டாக்டர் திரைப்படம் அமைந்துள்ளது. அந்தவகையில் மெரினா திரைப்படத்தில் பார்த்த சிவகார்த்திகேயனுக்கும் டாக்டர் திரைப்படத்தில் பார்க்கும் சிவகார்த்திகேயனுக்கும் வித்யாசம் ஏராளமாக உள்ளன.

doctor-1
doctor-1

மேலும் இத் திரைப்படம் பார்ப்பதற்கு மிகவும் நல்ல கதையம்சம் உள்ள திரைப்படமாக இருப்பது மட்டுமில்லாமல் மிகக் குறைந்த காலகட்டத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் இந்த அளவிற்கு வளர்ந்தது மிகவும் ஒரு அதிசயமான விஷயம் தான்.

doctor-2
doctor-2