சிவகார்த்திகேயன் நடிப்பில் நெல்சன் திலிப்குமார் இயக்கத்தில் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த திரைப்படம் டாக்டர். இந்த திரைப்படம் யாரும் எதிர்பார்க்காத அளவுக்கு நல்ல விமர்சனத்தை பெற்றதோடு மட்டுமல்லாமல் வசூலில் மிகப்பெரிய அளவில் வேட்டை நடத்தியது என்று தான் சொல்ல வேண்டும்.
இதுவரை சிவகார்த்திகேயன் படங்கள் நல்ல வரவேற்பை பெற்றிருந்தாலும் சொல்லிக்கொள்ளும்படி மிகப்பெரிய அளவில் வசூல் வேட்டை நடத்தியது கிடையாது ஆனால் இந்த திரைப்படம் அதை செய்து காட்டியதால் சிவகார்த்திகேயன் செம்ம சந்தோஷத்தில் இருக்கிறார்.
போதாத குறைக்கு டாக்டர் படத்தை தயாரித்து உள்ளதால் இரட்டிப்பு சந்தோஷத்தில் இருக்கிறார். டாக்டர் படம் 100 கோடியை வசூலை தாண்டி புதிய சாதனை படைத்துள்ளது. சிவ கார்த்திகேயன் டாக்டர் திரைப்படம் தமிழில் தாண்டி மற்ற மொழிகளிலும் டப் செய்யப்பட்டு வெளியாகி அங்கேயும் நல்ல வசூல் வேட்டை நடத்தி சிறப்பாக ஓடிக்கொண்டிருக்கிறது.
இப்படி இருக்கின்ற நிலையில் தீபாவளியன்று டாக்டர் திரைப்படம் சன் டிவியில் ஒளிபரப்பப்பட்டது. திரையரங்கில் மக்கள் கூட்டத்தை எப்படி இழுத்தோ அதுபோலவே தீபாவளியன்று டாக்டர் திரைப்படம் பெரிய அளவில் மக்கள் கூட்டத்தை கவர்ந்து இழுக்கும் என கணக்குப் போட்டது சன்டிவி ஆனால் அது எதிர்பார்த்தது நடக்கவில்லை.
ஆமாம் டிஆர்பி ரேட்டிங்கில் இந்த திரைப்படத்தை வெறும் 16% பேர் தான் பார்த்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன அதிலும் குறிப்பாக சன் டிவியில் அஜித் நடிப்பில் வெளியான விசுவாசம் திரைப்படத்தை பார்த்த மக்கள் கூட டாக்டர் திரைப்படத்தை டிவியில் பார்க்கவில்லை என்பதுதான் ஹைலைட். விஸ்வாசம் திரைப்படத்தை 1.8 கோடி பேர் பார்த்து கண்டு களித்தனர் ஆனால் சிவகார்த்திகேயன் டாக்டர் திரைப்படத்தை 1.3 கோடி பேர் மட்டுமே பார்த்து உள்ளனர். இச்செய்தி தற்போது ரசிகர்கள் சமூக வலைதளப் பக்கத்தில் பரப்பி வருகின்றனர்.