இளம் இயக்குனர்கள் அடுத்தடுத்த பல சூப்பர் ஹிட் திரைப்படங்கள் கொடுத்து ஒரு கட்டத்தில் டாப் நடிகர்களுடன் கை கொடுப்பதை வழக்கமாக வைத்துள்ளனர் அதை தற்போது செய்து உள்ளவர்தான் இயக்குனர் நெல்சன் திலிப்குமார். ஆரம்பத்தில் நயன்தாராவை வைத்து கோலமாவு கோகிலா என்ற சூப்பர் ஹிட் காமெடி படத்தை கொடுத்தார்.
அதை தொடர்ந்து நடிகர் சிவகார்த்திகேயனை வைத்து “டாக்டர்” என்ற திரைப்படத்தை சமீபத்தில் கொடுத்தார் இந்த திரைப்படம் தற்போது வரையிலும் சக்கைபோடு போட்டுக் கொண்டு வருகிறது. இந்த திரைப்படத்தை தொடர்ந்து தற்போது தளபதி விஜய் உடன் முதல் முறையாக கைகோர்த்து பீஸ்ட் என்னும் திரைப்படத்தை எடுத்து வருகிறார்.
இப்படத்தின் படபிடிப்பு 75% முடிவடைந்த நிலையில் அடுத்த கட்ட ஷூட்டிங் தற்போது எடுக்கப்பட்டு வருகிறது இப்படி இருக்கின்ற நிலையில் நெல்சன் திலிப்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவான டாக்டர் திரைப்படம் 90 கோடிக்கு மேல் வசூல் வேட்டை நடத்தி உள்ளதாக சமிபத்திய தகவல்கள் வெளிவந்தது.
இந்த திரைப்படத்தின் பட்ஜெட் கம்மியாக இருந்தாலும் எதிர்பார்க்காத அளவிற்கு தற்போது வசூல் வேட்டை அள்ளி உள்ளது பலருக்கும் ஆச்சர்யத்தை கொடுத்துள்ளது. அதற்கு முக்கிய காரணம் இந்த திரைப்படத்தின் கதை களம் ஒருபக்கம் இருந்தாலும் இதில் நடித்தவர்கள் ஒவ்வொருவரும் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி அசத்தியதனாலே இன்றும் திரையரங்கில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது என கூறப்படுகிறது.
மேலும் இந்த படம் தமிழில் தாண்டி தற்போது கேரளாவிலும் மொழிமாற்றம் செய்யப்பட்டு அங்கேயும் ரிலீஸ் ஆகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. கேரளாவில் இதுவரை அறுபத்தி ஆறு லட்சத்திற்கும் மேல் வசூல் வேட்டை நடத்தியது தற்போது வரை டாக்டர் திரைப்படம் 100 கோடிக்கு மேல் வசூலில் புதிய சாதனை படைத்துள்ளதாக கூறப்படுகிறது இதுவரை எந்த ஒரு படமும் நிகழ்த்தாத சாதனை நிகழ்த்தி ஒரு புதிய மைல் கல்லை எட்டியுள்ளது.