சிவகார்த்திகேயன் நடிப்பில் தற்போது வெளியாகியுள்ள திரைப்படம் “டாக்டர்” இந்த திரைப்படம் இன்று திரையரங்கில் வெளியாகி மக்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று சிறப்பாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த திரைப்படம் திரை உரிமையாளர்களுக்கும் விநியோகஸ்தர்களுக்கும் நல்லதொரு லாபத்தை கொடுக்கும் என படத்தை பார்த்த ரசிகர்களும் சினிமா பிரபலங்களும் சொல்லி வருகின்றனர்.
அந்த அளவிற்கு படம் சிறப்பாக இருக்கிறதாம். படம் நல்லதொரு கருத்தையும் அதேசமயம் காமெடி கலந்து இருப்பதால் படம் பல நாட்கள் ஒடுவதோடு பிளாக்பஸ்டர் படமாக டாக்டர் படம் மாறும் என கூறி உள்ளனர். இச்செய்தியை அறிந்த பலரும் தற்போது இந்த படத்தை புக் செய்து வருகின்றனர்.
சமீபகாலமாக திரையரங்குகள் திறக்கப்பட்டு இருந்தாலும் மிகப் பெரிய அளவில் எந்த ஒரு படமும் வரவேற்பை பெறாமல் இருந்த நிலையில் தற்போது சிவகார்த்திகேயன் டாக்டர் திரைப்படம். அதை பூர்த்தி பண்ணி உள்ளது. மக்கள் கூட்டத்தை அலைஅலையாக இழுத்து வருகிறதாம்.
இதனால் திரையரங்க உரிமையாளர்கள் செம்ம சந்தோஷத்தில் இருக்கின்றனர். டாக்டர் திரைப்படத்தில் பிரியங்கா மோகன், அருண் அலெக்ஸ்சாண்டர், யோகிபாபு, அர்ச்சனா, தீபா, வினய், போன்ற ஒவ்வொரு நடிப்பும் பேசும்படியாக இருந்துள்ளது படம் ரசிக்கும்படி சிறப்பாக இருந்து வந்துள்ளன இந்த படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் தற்போது நல்ல வேட்டை நடத்துகிறது.
இந்த நிலையில் இந்த படத்தை புக் செய்து வைத்து பார்த்தால் மட்டுமே இந்த படம் பல கோடிகளை சம்பாதித்துள்ளது என கூறப்படுகிறது. அந்த அளவுக்கு புக்கிங் வேட்டையை நடந்து நடந்துள்ளதால் முதல் நாள் மட்டும் இந்த திரைப்படம் குறைந்தது 10 கோடிக்கு மேல் வசூலிக்கும் என பலரும் கூறுகின்றனர்.