சாதனை மேல் சாதனை நிகழ்த்தும் டாக்டர் அதிர்ந்த தமிழ் சினிமா பிரபலங்கள்

doctor
doctor

நடிகர் சிவகார்த்திகேயன் மீடியா உலகில் இருந்ததால்  ஓரளவு மக்கள் எந்த மாதிரியான படத்தை எதிர்பார்ப்பார்கள் எப்படி கொண்டாடுவார்கள் என்பதை புரிந்து வைத்துக் கொண்டிருந்தார். மக்களை நன்கு புரிந்து வைத்து இருந்ததால் சிறப்பான கதையை தேர்ந்தெடுத்து மக்களுக்கு கொடுத்து வெற்றி கண்டு வருகிறார் அந்த காரணத்தினாலேயே சிவகார்த்திகேயனின் படங்கள் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் ஹிட் அடிக்கின்றன.

சமிபத்தில் கூட  சிவகார்த்திகேயன் நடிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவான டாக்டர் திரைப்படமும் தற்போது புதிய ஒரு சாதனை படைத்துள்ளது. இந்த படத்தை எடுத்த படக்குழு கூட எதிர்பார்த்திருக்க மிகப்பெரிய ஒரு வசூல் வேட்டை நடத்தியும் என்று யாரும் எதிர்பார்க்காத அளவிற்கு வசூலை வாரி குவித்தது. இதுவரை சிவகார்த்திகேயனின் படங்கள் நல்ல வசூல் வேட்டை நடத்தி இருந்தாலும் 100 கோடியை தொட்டதே கிடையாது.

கிட்டத்தட்ட நெருங்கி உள்ளது என்று கூறப்படுகிறது அந்த வகையில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான வேலைக்காரன் திரைப்படம் மட்டும் சுமார் 86 கோடி வசூல் ஈட்டியது அதைத் தொடர்ந்து சிவகார்த்திகேயனின் படங்கள் கிட்டத்தட்ட அதே ரேஞ்சுக்கு சென்றாலும் 100 கோடியை தொட்டது இல்லை ஆனால் தற்போது டாக்டர் திரைப்படமோ 90 கோடி வரை வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகின்றது.

இன்னும் குறிப்பிட்ட நாட்களுக்குள்ளேயே 100 கோடியை தொட்டு புதிய மைல்கல்லை எட்டும் என கூறப்படுகிறது மேலும் சிவகார்த்திகேயன் கேரியரில் மிக முக்கியமான படமாக டாக்டர் திரைப்படம் இருக்கும் என கணிக்கப்படுகிறது. இந்த திரைப்படத்தில் சிவகார்த்திகேயனுடன் இணைந்து பிரியங்கா மோகன், இளவரசன், அலெக்ஸாண்டர், யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லே போன்ற ஒவ்வொருவரும் சிறந்த பங்களிப்பை கொடுத்ததால் இந்த திரைப்படம் எந்தஒரு குறையும் சொல்ல முடியாத அளவிற்கு படம் நகர்வதால் தற்போது மக்கள் மற்றும் ரசிகர்களுக்கு பிடித்த படமாக இந்த படம் இருக்கிறது.

சிவகார்த்திகேயன் டாக்டர் திரைப்படம் தனுஷ், விஜய் ஆகியோர் படங்களின் வசூலை ஓவர்டேக் செய்து முன்னேறிக் கொண்டே செல்கிறது என கூறப்படுகிறது. சும்மாவா  சிவகார்த்திகேயன் பல மடங்கு சம்பளம் உயர்த்துவார் தற்போது இந்த படம் ஹிட் அடித்துள்ளதால் தற்போது இன்னும் சம்பளம்  ஏற்றினாலும் ஏற்றுவார் என ஒரு தரப்பு ரசிகர்கள் கூறுகின்றனர்.  எப்படியோ டாக்டர் படம் ஒரு புதிய மைல்கல்லை எட்டுவது தற்போது திரையுலகில் கொண்டாடப்படுகிறது.