ஒருபக்கம் ரத்த தானம்.! மறுபக்கம் கொரோனா சிகிச்சை.. ரியல் ஹீரோவாக மாறிய மருத்துவர்கள்.! நெகிழ வைக்கும் சம்பவம்

man-getting-blood
man-getting-blood

பீகார் மாநிலத்தில் சிகிச்சைக்கு தேவைப்படும் இரத்தப் பற்றாக்குறையை சமாளிக்க தாங்களாகவே மருத்துவர்கள் முன்வந்து ரத்ததானம் செய்யும் சம்பவம் பார்ப்பவர்களை நெகிழ்ச்சி அடைய வைத்துள்ளது.

நாடு முழுவதும் கொரோனா தொற்று மிக வேகமாகப் பரவி வருகிறது அதனால் பொதுமக்கள் யாரும் வெளியே செல்லாமல் வீட்டிற்குள்ளேயே இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது, அதனால் ரத்த தானம் செய்ய யாரும் முன்வருவதில்லை, இதனால் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மக்கள் மத்தியில் ஏராளமான கர்ப்பிணி பெண்கள் குழந்தைகள் நோயாளிகள் விபத்தில் பாதிக்கப்பட்ட மக்கள் என பலரும் ரத்தம் கிடைக்காமல் தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

அதுமட்டுமில்லாமல் ரத்த வங்கிகளில் ரத்த பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது இந்த பற்றாக்குறையை போக்க கொரனா காலத்தில் ரத்த தானம் செய்தால் நோய் தொற்று ஏற்படாது என்பதை மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பீகார் மாநிலத்தில் உள்ள மருத்துவர்கள் தங்கள் ரத்தத்தை கோரனோ வைரஸ் நோயாளிகளுக்கு மட்டும் அல்லாமல் சிக்கலான அறுவை சிகிச்சை நோயாளிகளுக்கு அளித்து பல உயிர்களை காப்பாற்றி வருகிறார்கள்.

இதுபற்றி தெரிவித்துள்ள இந்திராகாந்தி மருத்துவ நிறுவனம் கண்காணிப்பாளர் டாக்டர் மனிஷ் மண்டல், கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பது மட்டுமல்லாமல் சிக்கலான அறுவை சிகிச்சைகளையும் செய்து வருகிறோம். அந்த சமயத்தின் முக்கியமான விஷயம் இரத்தமாகும் பொதுமக்கள் ஊரடங்கு காரணமாக  வெளியே வராமல் இருப்பதால் ரத்த வங்கிகளில் ரத்த பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது எனக் கூறியுள்ளார்.

அது மட்டுமில்லாமல் தேசிய சுகாதார மையம் ரத்ததானம் செய்பவர்களுக்கு கூடுதல் பாதுகாப்பு நடவடிக்கைகளை செய்து வருகிறது எனவே மக்கள் ஒரு உயிரை காக்க ரத்ததானம் செய்ய முன்வரவேண்டும் என மருத்துவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளார்.