ஒரே நாளில் மோதிக் கொள்ள போகும் சிம்பு மற்றும் தனுஷ்..! ரிலீஸ் தேதியுடன் வெளிவந்த லேட்டஸ்ட் அப்டேட்..!

dhanush-simbu
dhanush-simbu

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராகவலம் வருபவர்கள் தான் நடிகர் சிம்பு மற்றும் தனுஷ் இவர்கள் இருவருமே தற்போது தமிழ் சினிமாவில் டாப் நடிகராகவும் தனக்கென ஒரு மாபெரும் ரசிகர் கூட்டத்துடன் வலம் வந்து கொண்டிருக்கிறார்கள்.

ஆனால் சிம்பு சமீப காலமாக எந்த ஒரு திரைப் படங்களிலும் நடிக்காமல் இருந்து ரீ என்ட்ரி கொடுத்து ரசிகர்களை கவர்ந்துள்ளார்  ஆனால் சிம்பு நடிக்காமல் இருந்த காலகட்டத்தில் தனுஷ் தன்னுடைய பிரம்மாண்ட நடிப்பை வெளிகாட்டி ஹிந்தி ஹாலிவுட் என கலக்கிக் கொண்டிருக்கிறார்.

அந்தவகையில் நடிகர் தனுஷ் சமீபத்தில் நடித்துள்ள திரைப்படம் ஆனது விரைவில் வெளியாக உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது அந்த வகையில் வருகின்ற டிசம்பர் மாதம் 24ஆம் தேதி தனுஷின் அந்த  திரைப்படம் வெளியாக உள்ளது.

மேலும் இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் ஏ ஆர் ரகுமான் அவர்கள் தான் இசையமைத்துள்ளார் பொதுவாக ஏ ஆர் ரகுமான் இசை என்றாலே அனைவருக்கும் பிடிக்கும் அந்த வகையில் இந்த திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.

நடிகர் சிம்பு  சமீபத்தில்தான் வெங்கட்பிரபு இயக்கத்தில் மாபெரும் வெற்றி திரைப்படம் ஒன்றை கொடுத்துள்ளார் அந்த வகையில் இந்த மாநாடு திரைப்படமானது வருகின்ற டிசம்பர் 24ஆம் தேதி சோனி லைவ்  தளத்தில் வெளியாக உள்ளது.

இவ்வாறு டாப் நடிகர்களாக வலம் வரும் சிம்பு மற்றும் தனுஷ் ஆகிய இருவரின் திரைப்படம் ஒரே நாளில் இணையத்தில் வெளியாக உள்ளதன் காரணமாக ரசிகர்கள் மிகுந்த சந்தோஷத்தில் இருப்பது மட்டுமில்லாமல்  இது வியக்கத்தக்க விஷயமாக அமைந்துள்ளது.