டாக்டர், பீஸ்ட் படத்தை தொடர்ந்து முன்னணி நடிகரின் படத்தில் நடிக்க போகும் – காமெடி நடிகர் ரெடின் கிங்ஸ்லி.! அந்த ஹீரோ யார் தெரியுமா.?

redin kingsli
redin kingsli

திறமை இருப்பவர்கள் உடனடியாக வெள்ளித்திரையில் டாப் நட்சத்திரமாக மாற முடியும் அந்த வகையில் ஓரிரு தமிழ்ப் படங்களிலேயே நடித்து மக்களின் மனதை அதிகமாக சம்பாதித்து தற்போது காமெடியை கொடுத்து மக்கள் மற்றும் ரசிகர்களை மகிழ்வித்து வருபவர் ரெடின் கிங்ஸ்லி.

இவர் நயன்தாரா, யோகி பாபு நடிப்பில் உருவான கோலமாவு கோகிலா என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தனது பயணத்தை தொடர்ந்தார். இந்த திரைப்படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப்படத்தில் அவருக்கு சிறப்பான கதாபாத்திரத்தை கொடுத்து தமிழ் சினிமாவில் அறிமுகப் படுத்தி உள்ளார் இயக்குனர்.

பிறகு இவரது திறமையை கண்ட இயக்குனர் நெல்சன் திலீப்குமார் அடுத்தடுத்த படங்களிலும் இவரை கமிட் செய்து வருகிறார். அந்த வகையில் சிவகார்த்திகேயனின் டாக்டர் திரைப்படத்திலும் முக்கிய காமெடியனாக இவர் நடித்துள்ளார் மேலும் படத்தில் பெரும்பாலான காமெடிகளில் இவர்தான் அசத்தியுள்ளார்.

தற்போது கூட தளபதி விஜயுடன் இணைந்து பீஸ்ட் திரைப்படத்தில் நடிக்கிறார். அதை தொடர்ந்து இவர் அடுத்ததாக மிகப்பெரிய டாப் நடிகர்கள் ஒருவருடன் கை கோர்த்து உள்ளார். என்ற தகவல் வெளியாகி உள்ளது. டாக்டர் திரைப்படம் மிகப்பெரிய ஹிட் அடிக்க முக்கிய பங்கு பவர் ரெடின் கிங்ஸ்லி.

இவரது காமெடி அனைத்தும்  சிறப்பாக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது அந்த காரணத்தினால் தற்போது பட வாய்ப்புகளை அள்ளி வருகிறார். சிம்புவுடன் முதல்முறையாக பத்து தல என்ற திரைப்படத்தில் ரெடின் கிங்ஸ்லி நடிக்க ஒப்பந்தமாகி உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. செய்தி அறிந்த ரசிகர்கள் பலரும் தற்போது அவருக்கு வாழ்த்துக்களை சொல்லி வருகின்றனர்.