டாக்டர் அஸ்வின் உருக்கமான பதிவு.! கண்கலங்கும் தருணம்

sethu

சினிமாவில் வளர்ந்து வரும் நடிகரும்,மருத்துவருமான சேதுராமன் அவர்கள் இரு தினங்களுக்கு முன்பு மாரடைப்பினால் உயிர் பிரிந்தார். சம்பவம் மக்கள் பிரபலங்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இவர் தமிழில் 2013 ஆம் ஆண்டு வெளிவந்த கண்ணா லட்டு தின்ன ஆசையா என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் அறிமுகமானார் சேதுராமன் சந்தானத்தின் நெருங்கிய நண்பரான சேதுராமன் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனைத் தொடர்ந்து அவர் சக்கபோடு போடு ராஜா, வாலிப ராஜா ,50/50 போன்ற படங்களில் ஹீரோவாகவும் துணை நடிகராகவும் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி மக்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்துக் கொண்டார்.சேதுராமன் அவர்கள் 2016 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 12 தேதி உமையால் என்பவரை திருமணம் செய்துகொண்டார் தற்போது இவருக்கு சகானா என்ற ஒரு பெண் குழந்தையும் இருக்கிறது இந்த நிலையில் வியாழக்கிழமை இரவு 8.45 மணிக்கு மாரடைப்பினால் காலமானார்.

சேதுராமன் அவர்களின் மருத்துவ ஆலோசகராக நமக்கு பல தகவலை தனது சமூக வலைத்தளத்தில் நாம் பயன்பெறும் வகையில் பல்வேறு குறிப்புகளை அறிவுரைகளையும் வழங்கியுள்ளார். சேதுராமன் அவர்களின் இறப்பிற்கு பல்வேறு துறைகளில் இருந்து அவருக்கு இரங்கலை தெரிவித்துள்ளனர். சேதுராமனின் நெருங்கிய நண்பரான சந்தானம் அவர்கள் இறுதி சடங்கில் கலந்துகொண்டார்.

அவரது நண்பரான அஷ்வின் விஜய் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார். இதுவரை என்னுடைய பிறந்த நாளை ஊடகங்கள் முன்பு அறிவித்ததில்லை ஆனால் மார்ச் 26 தான் என்னுடைய பிறந்தநாள் அந்த நாளில் எனது நண்பன் என்னை விட்டு சென்றது எனக்கு மிகுந்த வலி நாளாக மாரி உள்ளது என தெரிவித்தார்.

sethuraman
sethuraman

மேலும் அவர் கூறியதாவது  எனது பிறந்தநாளில் நான் பதில் அளித்த முதல் தொலைபேசி அழைப்பும் உங்களுடையது தான் நீங்கள் பிறந்தநாள் வாழ்த்து சொல்லும் பொழுது மச்சான் கொரோனோ காரணமாக ஊரடங்கு அமலில் இருப்பதால் இந்த வருடம் வெட்டுவதற்கு என்னிடம் பிரட் மட்டுமே இருக்கிறது என்று நகைச்சுவையாக கூறினார் ஆனால் அதுவே கடைசி அழைப்பாக இருக்கும் என்பதை நான் உணரவில்லை இனி வர இருக்கும் ஒவ்வொரு மார்ச் 26ம் தேதி எவ்வாறு இருக்கும் என்பதை கற்பனை செய்து பார்க்கிறேன் என பதிவிட்டுள்ளார் அஸ்வின் விஜய்.

sethuraman