எஸ் ஜே சூர்யா வுக்கு வாழ்க்கைதான்..! இணையத்தில் வைரலாகும் கடமையை செய் திரைப்படத்தின் டிரைலர்..!

kadamaiyai-sei
kadamaiyai-sei

தமிழ் சினிமாவில் சிறந்த நடிகர் மட்டுமின்றி இயக்குனராகும் தன்னுடைய திறனை வெளிக்காட்டி வருபவர்தான் எஸ் ஜே சூர்யா. இவ்வாறு பிரபலமான நமது நடிகர் பல்வேறு திரைப்படங்களை தயாரித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அந்தவகையில் இவர் இயக்கிய திரைப்படங்கள் ஒவ்வொன்றும் மாபெரும் ஹிட்டு கொடுப்பது மட்டுமில்லாமல் வசூலில் மிகப்பெரிய சாதனையை கொடுத்து வருகிறது அதே போலதான் இவர் நடிக்கும் திரைப்படங்களும் பெருமளவு வெற்றியை சந்தித்து வருகிறது இந்நிலையில் எஸ் ஜே சூர்யா யாஷிகா ஆனந்த் உடன் இணைந்து கடமையை செய் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார்.

இவ்வாறு எஸ் ஜே சூர்யா மாநாடு திரைப்படத்திற்குப் பிறகாக ஒரு திரைப்படத்தில் நடித்துள்ளார் என்றால் அது இந்த திரைப்படம்தான் இந்த திரைப்படத்தில் நடிகை யாஷிகா ஆனந்த் மிகவும் சிறப்பாகவும் கிளாமராகவும் நடித்துள்ளது நன்றாகவே தெரிகிறது.

அதுமட்டுமில்லாமல் இந்த திரைப்படத்தினை சுந்தர் சி நடிப்பில் வெளியான முத்தின கத்திரிக்காய் என்ற திரைப்படத்தை இயக்கிய வெங்கட்ராமன் என்பவர் தான் இயக்கி உள்ளார். மேலும் இத்திரைப்படத்தில் மொட்டை ராஜேந்திரன் போன்ற பல்வேறு பிரபலங்கள் நடித்துள்ளார்கள்.

அதுமட்டுமில்லாமல் இந்த திரைப்படத்தில் ஒளிப்பதிவாளராக வினோத் ராமசாமி பணியாற்றுவது மட்டுமில்லாமல் அருண் ராஜ் அவர்கள் தான் இசையமைத்துள்ளார். மேலும் இந்த திரைப்படத்தினை டி ஆர் ரமேஷ் ஜாகிர் உசேன் ஆகியவர்கள் இணைந்து தயாரித்தது மட்டுமில்லாமல் சிம்பு சினி ஆர்ட்ஸ் உலகம் முழுவதும் இந்த டிரைலரை வெளியிட்டு உள்ளார்கள்.

இதோ எஸ்ஜே சூர்யா மற்றும் ஹன்சிகா இணைந்து நடித்த கடமையை செய் திரைப்படத்தின் ட்ரெய்லர் வீடியோ.