சாமி படத்தில் விக்ரமை ஓட ஓட விரட்டிய பெருமாள் பிச்சையை ஞாபகம் இருக்கிறதா..! பலரும் அறிந்திராத இவரைப் பற்றிய சுவாரசியமான தகவல்கள்..!

samy-1
samy-1

பொதுவாக தமிழ் சினிமாவை பொருத்தவரை நடிகர்கள் அளவிற்கு வில்லன் கதாபாத்திரத்தில் நடிப்பவர்கள் பிரபலமானது கிடையாது.  அந்த வகையில் சில வில்லன் நடிகர்கள் தங்களுடைய நடிப்பின் மூலமாக அந்த வார்த்தையை மாற்றி வருகிறார் பிரபல நடிகர்.

இவ்வாறு பிரபலமான நமது நடிகர் தான் நடிக்கும் திரைப்படத்தில் தன்னுடைய கதாபாத்திரத்தின் பெயரே கொஞ்சம் வித்தியாசமாக இருக்கும் அந்த வகையில் இவரை கோட்டா சீனிவாச ராவ் என்று அழைப்பதைவிட சனியன் சகடை பெருமாள் பிச்சை என ரசிகர்கள் அழைத்து வருகிறார்கள்.

அந்த வகையில் இவர் வில்லன் கேரக்டரில் நடிக்கும் பொழுது தன்னுடைய முழு திறமையை வெளிக்காட்டி ரசிகர்களை மிரட்டி விடுவார் இவருடைய தந்தையார் சீதா ராமா ஆஞ்சநேயலு இவர் ஒரு மருத்துவர் ஆவார் அந்த வகையில் நமது கோட்டா சீனிவாச ராவ் முதலில் மருத்துவராக வேண்டும் என்று தான் நினைத்திருந்தாராம்.

நடிப்பின் மீது இருக்கும் ஆர்வம் அவரை சினிமா பக்கம் இழுத்து போட்டு விட்டது இதன் காரணமாகத்தான் கல்லூரி படிக்கும்போதே பல படங்களில் நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது இவ்வாறு கல்லூரி படிப்பை முடிந்த கையோடு ஆந்திராவில் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா வங்கியில் மேனேஜராக பணியாற்றி வந்தார்.

பின்னர் சினிமா மீது அதிக ஆர்வம் இருந்ததன் காரணமாக தன்னுடைய வேலையை உதறி தள்ளிவிட்டு ஹரி இயக்கத்தில் வெளியான சாமி திரைப்படத்தில் முதன்முதலாக என்ட்ரி கொடுத்தார் இந்த திரைப்படம் தான்  அவருடைய வாழ்க்கையில் ஒரு திருப்புமுனையாக அமைந்த திரைப்படமாகும்.

இவ்வாறுதான் நடித்த முதல் திரைப்படத்திலேயே ஏகப்பட்ட ரசிகர்களை கவர்ந்தது மட்டுமில்லாமல் பாராட்டையும் புகழையும் சம்பாதித்தார் அதன் பிறகு விஜய் நடிப்பில் வெளியான திருப்பாச்சி திரைப்படத்தில் சனியன் சகடை என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

அவ்வகையில் இந்த திரைப்படத்தில் விஜய் பிரபலமானாரோ இல்லையோ  இவருடைய கதாபாத்திரம் மிகவும் சிறப்பாக அமைந்துவிட்டது இந்நிலையில் ஆந்திர பிரதேசத்தில் இவர் வாடா கிழக்கு தொகுதியில் சட்டபேரவை உறுப்பினராக இவர் வலம் வந்து கொண்டிருக்கிறார்.

தற்போது நடிப்பு அரசியல் என கலக்கிக் கொண்டு வரும் நமது நடிகர் வில்லனாக பல விருதுகளை வாங்கியது மட்டுமில்லாமல் குணச்சித்திர நடிகராகவும் பல விருதுகளை வாங்கியுள்ளார் அந்தவகையில் பத்மஸ்ரீ விருதையும்  கோட்டா சீனிவாசராவ் பெற்றது மறக்க முடியாத உண்மை ஆகும்.