வெள்ளித்திரையில் பணியாற்றி வந்த பல பிரபலங்களும் பல வித்தியாசமான முறையில் தங்களுக்கு பிடித்த மாதிரி நிகழ்ச்சிகளை நடத்திக் காட்டி மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமாகி விடுவார்கள் காமெடி நடிகர்களில் ஒரு சிலர் உயரமாக இருந்தாலும் ஒரு சிலர் குள்ளமாக இருப்பதைப் பற்றி கவலைப்பட மாட்டார்கள் ஏனென்றால் இவர்கள் எப்படி இருந்தாலும் மக்கள் மத்தியில் மிகவும் புகழ்பெற்று விளங்கி விடுவார்கள்.
அந்த வகையில் மூன்று அடி சின்ன நடிகர் ஆனால் மக்கள் மத்தியில் இடம் பிடித்து எம்ஜிஆர் அவர்களிடம் நன்றாக பாராட்டுகளைப் பெற்று பல சினிமா பிரபலங்களை தனது நண்பர்களாக சேர்த்து வைத்து மறைந்த நடிகர் தான் தவக்களை என்ற சிட்டிபாபு இவரது தந்தை பொய் சாட்சி என்ற திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் பொழுது இவரை நடிகர் குள்ளமணி பார்த்துள்ளார் பின்பு அவரை அழைத்துக்கொண்டு இயக்குனர் பாக்யராஜ் இடம் அறிமுகப்படுத்தியுள்ளார்.
பாக்யராஜ் இவரது உடை நடை பாவனை உயரம் பாடி லாங்குவேஜ் போன்ற பல திறமைகள் இவரிடம் இருந்ததால் இவரது திரைப்படங்களில் இவரை அதிகமாக நடிக்க வைத்திருப்பார் மேலும் முந்தானை முடிச்சு திரைப்படத்தில் இவருக்கு வாய்ப்பு கொடுத்தார் அந்த திரைப்படத்தில் தவக்களை என்ற கதாபாத்திரத்தில் இவர் நடித்து மக்கள் மத்தியில் மிகவும் புகழ்பெற்று விலங்கி விட்டார்.
இவரது லட்சியம் என்னவென்றால் இவருக்கு தமிழ் சினிமாவில் கிட்டதட்ட 500 திரைப்படங்களில் நடித்து விட வேண்டும் என்ற ஆசை இருந்து உள்ளது ஆனால் 496 திரைப்படங்களில் மட்டுமே இவர் நடித்துள்ளாராம் இவரது நடிப்பை பார்த்து நடிகர் எம்ஜிஆரும் இவரை தூக்கி வைத்து கொஞ்சி உள்ளார் எனவும் தகவல் கிடைத்துள்ளது.
மேலும் இவர் இறுதியாக நடித்த திரைப்படம் தான் அற்புத தீவு அதன் பிறகு எந்த திரைப்படமும் நடிக்கவில்லை கேரளாவில் படப்பிடிப்பு முடிந்தவுடன் வீடு திரும்பி வந்துகொண்டிருந்த பொழுது மாரடைப்பு ஏற்பட்டு இவர் உயிரிழந்துள்ளார் ஆம் இவரது இழப்பை சினிமா பிரபலங்கள் பலராலும் தாங்க முடியவில்லை எனவும் தகவல் வைரலாகி வருகிறது.