நீண்ட இடைவேளைக்கு பிறகு விஜய் மற்றும் யுவன் சங்கர் ராஜா சந்தித்துக் கொண்டது ஏன் தெரியுமா.? ஒரு வழியாக வெளிவந்த காரணம்

yuvan and vijay
yuvan and vijay

தளபதி விஜய் திறமை உள்ளவர்களை எப்பொழுதும் பாராட்டுவார் மேலும் அவர்களுடன் இணைந்து பணிபுரிய ஆசைப்படுவது வழக்கம். திறமை உள்ள பலருக்கு வாய்ப்புகளைக் கொடுத்து அசத்தி வருகிறார் ஏன் இப்பொழுது கூட இவர் நடித்துவரும் பீஸ்ட் திரைப்படத்தில் கூட திறமையான  இயக்குனர் என்ற பெயரை எடுத்திருப்போம் நெல்சன் திலீப் குமாருடன் உடன் கை கோர்த்து நடித்து வருகிறார்.

படப்பிடிப்பு முற்றிலுமாக முடிந்ததையடுத்து அடுத்த கட்டமாக டப்பிங் பணிகள் போக ரெடியாக இருக்கிறது படக்குழு. இவரைப்போல் அது மக்கள் மத்தியில் பிரபலக் இசையமைப்பாளராக பெயரை எடுத்திருக்கும் யுவன் ஷங்கர் ராஜாவை அண்மையில் அழைத்து பாராட்டி உள்ளார் விஜய்.

விஜய்யும் யுவன் சங்கர் ராஜாவும் 2003 ஆம் ஆண்டு வெளியான புதிய கீதை என்ற திரைப்படத்தில் சந்தித்தனர் இந்த படத்தில் ஒரே ஒரு பாடலுக்கு மட்டும் இசை அமைத்தார் யுவன் சங்கர் ராஜா என்பது குறிப்பிடத்தக்கது அதன்பின் யுவன் சங்கர் ராஜவும், விஜய்யும் இணையவில்லை  தொடர்ந்து ரகுமான், வித்யாசாகர், தேவா போன்ற சிறந்த இசையமைப்பாளருடன் பணிபுரிந்து வந்ததால் இருவரும் இணைய  சந்திக்கவோ வாய்ப்புகள் கிடைக்காமல் போனது.

ஆனால் சமீபகாலமாக யுவன் சங்கர் ராஜாவின் தீம் மியூசிக் மற்றும் பாடலுக்கு இசையமைத்த அனைத்தும் சிறப்பாக இருந்த காரணத்தினால் விஜய் யுவன் சங்கர் ராஜாவை பார்த்து பாராட்ட வேண்டுமென முயற்சித்தார் ஆனால் மாஸ்டர், பீஸ்ட் என அடுத்தடுத்து படங்களில் தொடர்ந்து பிசியாக நடித்ததால் விஜய் அவரை சந்திக்க முடியாமல் போனது.

ஒருவழியாக பீஸ்ட் திரைப்படத்தின் ஷூட்டிங் வெற்றிகரமாக முடித்து விட்டதால் விஜய், யுவன் சங்கர் ராஜாவுக்கு போன் பண்ணி ஃப்ரீயாக இருந்தால் பேசலாம் என சொன்னார் உடனே யுவன் சங்கர் ராஜாவும், விஜய்யும் அடையாரில் உள்ள அலுவலகத்தில் சந்தித்து பேசி உள்ளனர். இருவரும் அரை மணி நேரம் பேசினார் மேலும் நாம் இருவரும் சேர்ந்து பணிபுரியும் போல் பேசி உள்ளதாக தெரியவந்துள்ளது அது தளபதி 67 அல்லது 68 என்பது தெரியவில்லை.