தமிழ் சினிமாவில் 20 ஆண்டுகளுக்கு மேலாக தற்போது வரை முன்னணியின் நடிகைகளுக்கு இணையாக நடித்து வரும் நடிகை திரிஷா அவர்கள் தற்போது இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் கடந்த மாதம் செப்டம்பர் 30ஆம் தேதி வெளியான பொன்னியின் செல்வன் என்ற திரைப்படத்தில் குந்தவை கதாபாத்திரத்தில் நடித்த மிரட்டி உள்ளார் அது மட்டுமல்லாமல் இந்த கதாபாத்திரம் ரசிகர் மதியம் மிகவும் பிரபலமானதால் அவருக்கு பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்திருந்தது நாம் அனைவருக்கும் தெரிந்த ஒன்று.
இதனை தொடர்ந்து நடிகை திரிஷா அவர்கள் அடுத்தடுத்த திரைப்படத்தில் நடிக கமிட்டாகி நடிக்க உள்ள நிலையில் இடைப்பட்ட காலத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு உள்ளார். இதனை தொடர்ந்து நடிகை திரிஷா தற்போது ஒரு புகைப்படத்தை சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார் இதை பார்த்த ரசிகர்களும் பிரபலங்களும் அதிர்ச்சியில் உள்ளனர்.
அதாவது நடிகை திரிஷா தனது காலில் கட்டு போட்டு கொண்டிருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் இதனால் அதிர்ச்சி அடைந்த ரசிகர்கள் திரிஷாவுக்கு என்னாச்சு என கேள்வி எழுப்பி உள்ளனர். இந்த நிலையில் திரிஷா அவர்கள் சுற்றுப்பயணத்தின் மேற்கொண்டிருந்த போது கீழே விழுந்து கால் எலும்பு முறிந்து விட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதை தெரிந்து கொண்ட ரசிகர்கள் சீக்கிரமா நடிகை திரிஷாவிற்கு பூரண குணமடைய வேண்டும் என வாழ்த்து தெரிவித்தனர்.
அது மட்டுமல்லாமல் திரிஷா தற்போது சுற்றுப்பயணத்தை பாதியில் நிறுத்திவிட்டு நாடு திரும்பி இருக்கிறார் இந்த நிலையில் நடிகை திரிஷா அடுத்தடுத்த திரைப்படங்களில் நடிக்க உள்ள நிலையில் தற்போது அவருக்கு காலில் அடிபட்டு இருக்கிறது இதனால் அவர் நடிப்பாரா நடிக்க மாட்டாரா என்று சில குழப்பங்கள் ஏற்பட்டுள்ளது.
அதுமட்டுமல்லாமல் நடிகர் அஜித் அவர்கள் நடிக்கும் ஏகே 62 திரைப்படத்தில் கமிட்டாகி உள்ளதாக கூறப்படுகிறது அதனை தொடர்ந்து நடிகர் விஜய் நடிக்க உள்ள தளபதி 67 திரைப்படத்திலும் நடிகை திரிஷா அவர்கள் நடிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.