வெள்ளித்திரையில் நடிகர்,இயக்குனர் போன்ற பல திறமைகளைக் கொண்டு வலம் வந்த பிரபலங்களில் ஒருவர்தான் ராகவா லாரன்ஸ் இவரது இயக்கத்தில் கடந்த 2011 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் தான் காஞ்சனா இந்த திரைப்படத்தை இவரே இயக்கி நடித்து இருப்பார் என்று தான் கூற வேண்டும் மேலும் இந்த திரைப்படம் முழுக்க முழுக்க திருநங்கைகளை வைத்து மையமாக எடுக்கப்பட்ட திரைப்படம் என்று கூட கூறலாம்.
அந்தவகையில் இந்த திரைப்படத்தில் நடிகர் சரத்குமார் கூட திருநங்கை வேடத்தில் தான் நடித்திருப்பார் மேலும் சரத்குமாருக்கு மகளாக நடித்தவர் தான் ப்ரியா இவருக்கு காஞ்சனா திரைப்படத்தில் நடித்த பொழுது மக்கள் நல்ல வரவேற்பு கொடுத்தார்கள் அதனைத் தொடர்ந்து இவரை பெரிதாக எந்த திரைப்படங்களிலும் நாம் பார்க்கவில்லை.
இவர் சமீபத்தில் மகளிர் தினத்தை முன்னிட்டு அளித்த பேட்டி ஒன்றில் மக்களை அதிர்ச்சியாக்கி உள்ளது அதாவது அதில் அவர் கூறியது என்னவென்றால் சினிமாவில் நடிக்க முதலில் வாய்ப்புக் கேட்டால் அவர்கள் அட்ஜஸ்ட்மெண்ட் பண்ணிக்கிறியா என்று கேட்கிறார்கள் என்று கூறி மக்களை அதிர்ச்சியாக்கி விட்டார்.
கடந்த சில வருடங்களில் தமிழ் சினிமாவில் இதுபோன்ற பல பிரச்சனைகள் இருந்து வருவதையும் நாம் பார்த்து வருகிறோம் அதேபோல் இவரையும் ஒரு திரைப்படத்தில் நடிப்பதற்காக ஒரு தயாரிப்பாளர் போன் செய்து இவரிடம் ஆரம்பத்தில் நன்றாக பேசிவிட்டு போகப்போக இவரது பேச்சு மாறிவிட்டதாம் அதாவது அந்த தயாரிப்பாளர் இவரிடம் நீங்க எப்படி மாறினீங்க என்பதைப்பற்றியும் தவறாக பேசி உள்ளாராம்.
அதுமட்டுமல்லாமல் உங்களுக்கு இந்த திரைப்படத்தில் நடிக்க வேண்டுமென்றால் முதலில் நாங்கள் சொல்வதை தான் நீங்கள் கேட்க வேண்டும் என்றும் அந்த தயாரிப்பாளர் கூறியதாக மகளிர் தினத்தை முன்னிட்டு அவர் அளித்த பேட்டியில் கூறியுள்ளாராம்.
மேலும் இந்த தகவலை அறிந்த பல ரசிகர்களும் இவருக்கா இப்படி ஒரு நிலைமை வரவேண்டும் சினிமாவைப் பொருத்தவரை பல நல்லவர்களும் இருக்கிறார்கள் கெட்டவர்களும் இருக்கிறார்கள் என்பதை அறிந்து கொண்டு தான் நடிக்க போகவேண்டும் இதுபோல் இனிமேல் நடக்கக்கூடாது என்று நாங்கள் கூறுகிறோம் என கமென்ட் பதிவு செய்து வருகிறார்கள்.