கொரோனா இரண்டாம் அலை மிக வேகமாக பரவி வருவதால் தமிழக அரசு நாளுக்கு நாள் ஊரடங்கை மட்டும் புதுப்பித்துக் கொண்டே போகிறது என்னதான் ஊரடங்கு போட்டாலும் நாங்கள் எப்பொழுதும் இருக்கிற மாதிரிதான் இருப்போம் என மக்கள் பலரும் தமிழக அரசின் பேச்சைக் கேட்காமல் வெளியே சகஜமாக சுற்றிதிரிகிறார்கள்.
இன்று முதல் ஊரடங்கு ஒரு வாரத்திற்கு மேல் அறிவிக்கப்பட்டதால் பல மகள்களும் கஷ்டப்பட்டு வருகிறார்கள் ஏனென்றால் மக்கள்கள் பலரும் தினசரி வேலை செய்து சாப்பிட்டு வரும் நிலையில் இருக்கிறார்கள் திடீரென்று அவர்களுக்கு ஊரடங்கு போட்டதால் என்ன செய்வது என்றே தெரியாமல் இருக்கிறார்கள் பலரும் நாங்கள் தினசரி வேலைக்கு சென்றால் தான் எங்களுக்கு சாப்பாடு என சமூக வலைதளப் பக்கங்களில் கூறி வருகிறார்கள்.
அதுமட்டுமல்லாமல் இவர்களுக்கு உதவி செய்யும் வகையில் சினிமா துறையில் பணியாற்றி வரும் பல நடிகர்கள்,நடிகைகள் முக்கிய பிரபலங்கள் போன்ற அனைவரும் தன்னால் முடிந்த உதவியை செய்து வருகிறார்கள் அந்த வகையில் பார்த்தால் சினிமா துறையில் பணியாற்றி வரும் பல நடிகர்கள் தங்களால் முடிந்த உதவிகளை செய்து வருகிறார்கள்.
இந்நிலையில் நடிகர் சிவகார்த்திகேயனும் தன்னால் முடிந்த உதவியை செய்துள்ளாராம் கொரோனா இரண்டாம் அலை மிக வேகமாக பரவி வருவதால் நடிகர் சிவகார்த்திகேயன் தனது ஜி தாஸ் நினைவு அறக்கட்டளை மூலம் நடிகர் சங்க உறுப்பினர் நலனுக்காக ஒரு லட்சம் வழங்கியுள்ளார் என தகவல் கிடைத்துள்ளது.
இதேபோல் நடிகர் சங்க உறுப்பினர்களுக்கு நிறைய உதவிகளை செய்ய வேண்டும் என பல சினிமா பிரபலங்களும் கூறி வருகிறார்கள் மேலும் நடிகர் சங்கத்தில் பணியாற்றி வரும் அனைத்து நபர்களுக்கும் உதவி செய்தால் நன்றாக இருக்கும் என பலரும் சமூக வலைதளப் பக்கங்களில் கூறி வருகிறார்கள்.