தமிழ் சினிமாவில் கமர்சியல் மற்றும் ஆக்சன் படங்களை ம் குறைந்த பட்ஜெட்டில் எடுத்து மக்களுக்கு விருந்து படைத்து வந்த நிலையில் அதனை ஹெச்டி தரத்தில் சற்று மாறுபட்ட கதாபாத்திரத்தில் திணித்து அதை மக்களுக்கு விருந்தாக கொடுத்து வெற்றி கண்டவர் இயக்குனர் ஷங்கர். இவரைத் தொடர்ந்து தற்பொழுது பல இயக்குனர்களும் அதிக பட்ஜெட் படங்களை இயக்க முன்வருகின்றனர்.
இப்படி இருக்க ஷங்கர் தற்போது தமிழை தாண்டி ஹிந்தி மற்றும் தெலுங்கு மொழிகளும் பிரம்மாண்ட பட்ஜெட் படங்களை எடுக்க ரெடியாக இருக்கிறார். அதற்கு முன்பாக இந்தியன் 2 திரைப்படத்தை எடுக்க அதிகம் ஆர்வம் காட்டினார் ஆனால் அங்கு நடந்த சில அசம்பாவிதங்கள் படம் பாதியிலேயே கைவிடப்பட்டது.
இருப்பினும் தயாரிப்பு நிறுவனம் இந்தியன் 2 படத்தை எடுக்க சங்கரை விடாமல் துரத்துகிறது இதனால் ஷங்கர் என்ன செய்வது என்று தெரியாமல் இருக்கிறார் இந்த நிலையில் இந்தியன் 2 படத்தை முடித்துவிட்டு அவர் அடுத்ததாக விஜய்யை வைத்து ஒரு பிரமாண்ட படத்தை எடுக்க முனைப்பு காட்டிய தகவல்கள் வெளியாகின்றன.
அந்த படத்தின் கதையை இயக்குனர் ஷங்கர் விஜய்யை நேரில் சந்தித்து கதையைச் சொல்லி உள்ளார் விஜய்க்கும் அது பிடித்துப் போக இதை எடுக்கலாம் என ஓகே சொல்லி இருந்தனர் ஆனால் அதன் பிறகு இந்த படத்திற்கான நகர்வு நகராமல் அப்படியே இருந்துள்ளது.
இது போன்று பல தடவை இவர்கள் இருவரும் இணையும் படமும் நகராமல் அப்படியே கிடப்பில் கடந்தது. அதற்கு முக்கிய காரணம் ஷங்கருக்கும் விஜய்க்கு மிகப்பெரிய தொகையை ஒதுக்கி விட்டு தான் படத்திற்கான தொகையையும் கொடுக்க முடியும் என்பதால் மிகப்பெரிய தொகைபோகும் என்பதால் படத்தை தயாரிக்கும் நிறுவனங்கள் பலரும் எடுக்காமல் அப்படியே விட்டுவிட்டு உள்ளனர்.