சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஆரம்பத்தில் குணச்சித்திர கதாபாத்திரம் வில்லன் பின் படிப்படியாக ஹீரோ என்ற அந்தஸ்தை பிடித்தார். ரஜினிகாந்த் 1975ஆம் ஆண்டு அபூர்வராகங்கள் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார் கே பாலச்சந்தர் தான் இவரை தமிழ் சினிமா உலகில் அறிமுகப்படுத்தினார் அதனைத் தொடர்ந்து ரஜினி வில்லனாக ஆரம்பத்தில் 16 வயதினிலே மூன்று முடிச்சு போன்ற பல்வேறு படங்களில் நடித்திருந்தார்.
இந்த படங்களில் ரஜினியின் நடிப்பு வேற லெவல் இருந்ததால் ஒரு கட்டத்தில் அவர் ஹீரோவாக சினிமாவுலகில் அறிமுகப்படுத்தப்பட்டார். அதன் பின் இவரது நடிப்பு இன்னும் அதிகரித்தது மேலும் தொடர் ஹிட் படங்களை கொடுத்து அசத்தினார். அந்த வகையில் போக்கிரி ராஜா, முரட்டுக்காளை, பில்லா போன்ற படங்கள் இன்று வரையிலும் மக்கள் மன்றம் ரசிகர்களுக்கு பிடித்த படமாக மாறியது.
மேலும் தமிழ் சினிமாவில் தற்போது நம்பர் ஒன் நடிகராகவும் இருந்து வருகிறார் இவரைப்போலவே 1978ஆம் ஆண்டு தமிழ் சினிமா உலகில் நடிகை தொடங்கியவர் விஜயகாந்த் இவர் நடிப்பில் 1979ஆம் ஆண்டு அகல் விளக்கு என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார் இதுவரை விஜயகாந்த் 150க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.
இப்படி சினிமா உலகில் ஓடிக் கொண்டிருந்தவர் திடீரென சினிமாவை தவிர்த்து அரசியல் பிரவேசம் கண்டார் இவர் அரசியல் வளர்ச்சி ஆரம்பத்தில் அமோகமாக இருந்தது அதன் காரணமாகவே இவர் சட்டமன்ற உறுப்பினர் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவராக மாறினார். மேலும் சினிமாவிலும் நடிகர் சங்க தலைவராகவும் இருந்தார் இப்படி அரசியல் என இரண்டிலும் நல்லதொரு இடத்தைப் பிடித்த வந்தவர் விஜயகாந்த் இப்படி இருந்தாலும் சினிமா உலகில் சம காலத்தை நடிகர்களுடன் சேர்ந்து நடித்துள்ளார்.
இவரைப்போலவே ரஜினியும் பல்வேறு நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார் ஆனால் ரஜினியும், விஜயகாந்தும் இதுவரை இணைந்து நடிக்கவில்லை இவர்கள் இருவரும் இணைந்து நடித்திருந்தால் வரவேற்கத்தக்க ஒன்றாகத்தான் இருந்திருக்கும் ஆனால் இவர்கள் இருவரும் சேர்ந்து நடிக்கும்படி கதைகள் அமையவில்லை மேலும் இயக்குனர்களும் முயற்சி செய்யவில்லையாம்.