நானும், தனுஷும் சேர்ந்த படங்கள் ஏன் ஹிட் அடிக்குதுன்னு தெரியுமா.? உண்மையை பகிர்ந்த வெற்றிமாறன்

dhanush
dhanush

Dhanush : நடிகர் தனுஷ் வருடத்திற்கு இரண்டு மூன்று வெற்றி படங்களை கொடுத்து ஓடிக்கொண்டிருக்கிறார். அப்படி இவர் நடிப்பில் கடைசியாக வெளியான வாத்தி படம் 100 கோடி வசூல் செய்து பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது அதே சந்தோஷத்துடன் தனுஷ் கேப்டன் மில்லர் படத்தில் சூப்பராக நடித்து முடித்துள்ளார் அடுத்து தனது 50 -வது திரைப்படத்தில் நடிப்பதற்கான வேலைகளிலும் மும்பரம் காட்டி வருகிறார்.

இப்படிப்பட்ட தனுஷ் வெற்றிமாறனுடன் இணைந்து பல படம் பண்ணி உள்ளார் இவர்கள் கூட்டணியில் வெளிவந்த பொல்லாதவன், ஆடுகளம், வடசென்னை, அசுரன் போன்ற படங்கள் ப்ளாக்பஸ்டர் ஹிட் அடித்த நிலையில் இந்த கூட்டணி அடுத்து எப்பொழுது இணையும் என்பதை ரசிகர்கள் பெரிதும் எதிர்நோக்கி காத்திருக்கின்றனர் இந்த சூழலில் வெற்றிமாறன்  பேட்டி ஒன்றில் எனக்கும், தனுஷுக்கும் இடையே இருக்கும் புரிதல் குறித்து அவர் வெளிப்படையாக பேசி உள்ளார்.

ஒரு தடவை தனுஷ் போன் பண்ணி எனக்கு கலைபுலி தாணு தயாரிப்பில் ஒரு படம் பண்ண இருக்கிறேன் அதற்கு முன்னாடி நம்ம ரெண்டு பேரும் சேர்ந்து ஒரு படம் பண்ணலாமா என கேட்டு இருக்கிறார். அதற்கு வெற்றிமாறன் நான் ஒரு சிறிய பட்ஜெட்டில் ஒரு படம் பண்ண இருக்கிறேன். ஒரு அப்பா தனது பையனை அழைத்துகொண்டு காட்டுக்குள் செல்கிறார்.

அந்த பையனை தேடி ஒரு குரூப் சுத்தி கொண்டு இருக்கிறது. அவன் ஒரு கொலை பண்ணிருக்கான் செத்துப் போனவன் அவன் அண்ணனை கொலை பண்ணிருக்கான். இதனால் அப்பா, மகன்  காட்டுக்குள் போறாங்க அடுத்து என்ன நடக்காது என்பது தான் கதை என கூற தனுஷ் இது சூப்பராக இருக்கு சார் நான் அப்பா கதாபாத்திரத்தில் நடிக்கிறேன் என ஓபன்னாக கூறிவிட்டாராம்..

இந்த கதையை மற்றவர்கள் கேட்டிருந்தால் அந்த பையன் கதாபாத்திரத்தில் நடிக்க  ஆசைப்பட்டிருப்பார்கள். நான் இந்த கதை சொல்லும் போது அப்பா கதாபாத்திரத்தில் தனுஷை மனதில் வைத்து சொன்னேன் தனுஷம் அதை நன்கு உணர்ந்து தன் அப்பா கதாபாத்திரத்தில் நடிக்கிறேன் என சொன்னார். இதுதான் எனக்கும் தனுஷுக்கும், இடையே இருக்கும் புரிதல் என கூறினார்..