தமிழ் சினிமாவுலகில் உச்ச நட்சத்திரமாக விளங்கும் நடிகர்களில் ஒருவர் தான் சூர்யா அவரது நடிப்பில் சமீபத்தில் சூரரைப்போற்று என்ற திரைப்படம் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது மட்டுமல்லாமல் நல்ல விமர்சனத்தையும் பெற்று அதிகப் பார்வையாளர்களைப் பார்க்க வைத்து சாதனை படைத்தது மேலும் இந்த திரைப்படத்தை இயக்குனர் சுதா கொங்கரா இயற்றியுள்ளார்.
சூர்யா தற்பொழுது அடுத்அடுத்த திரைப்படங்களில் நடிக்க உள்ளார் என்பது பலருக்கும் தெரியும் அந்த வகையில் கௌதம் மேனன் இயக்கத்தில் சூர்யா நவரசா என்ற வெப் சீரியஸ் தொடரில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் சூர்யாவின் தயாரிப்பில் பிரபல முன்னணி நடிகரான அருண் விஜய்யின் மகன் தமிழ் திரையுலகில் அறிமுகமாக உள்ளார்.
சூர்யா தயாரிக்கும் இந்த திரைப்படத்திற்காக நேற்று பூஜை நடைபெற்றது மேலும் அந்த பூஜையில் அருண்விஜய் அவரின் மகன் சூர்யா, சிவகுமார், விஜயகுமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டுள்ளனர்.
அந்த பூஜையில் அருண் விஜய் சூர்யாவை பார்த்தவுடன் அவரை கட்டியணைத்து கன்னத்தில் முத்தம் கொடுத்துள்ளார் அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
இதோ அந்த புகைப்படம்.