நடிகர் அஜித்குமார் ரசிகர்கள் கொண்டாடும் படங்களை கொடுத்து வருகிறார் அந்த வகையில் துணிவு படத்தின் வெற்றியை தொடர்ந்து தனது 62 வது திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார் அதற்கு முன்பாக அஜித் ரசிகர்கள் ஒரு தரமான சம்பவம் செய்ய இருக்கின்றனர் ஆம் வருகின்ற மே 1ஆம் தேதி அஜித் பிறந்தநாளை முன்னிட்டு பல்வேறு கட்டவுட், பேனர்கள் வைப்பதோடு மட்டுமல்லாமல் ரத்ததானம், அன்னதானம் போன்றவற்றையும் செய்ய அஜித் ரசிகர்கள் திட்டமிட்டு இருக்கின்றனர். இப்படி இருக்கின்ற நிலையில் அஜித்த பட தயாரிப்பாளர் சோழ பொன்னுரங்கம் அஜித் ஏன் அனைவரையும் சந்திப்பதில்லை என்பது குறித்து வெளிப்படையாக கூறியுள்ளார்.
அமராவதி படத்தில் முதலில் அஜித்திற்கு பதிலாக வேறு ஒரு நடிகரை நடிக்க வைத்து தான் எடுத்தார்களாம் ஆனால் அவர்களின் நடிப்பு சரிவரவில்லை என்பதால் அந்த படத்தின் இயக்குனர் வேண்டாம் என சொல்லிவிட்டாராம் பிறகு தெலுங்கில் ஒரு பையன் இப்பொழுதுதான் வந்திருக்கிறான் பார்க்க மிகவும் அழகாக இருக்கிறான் வேண்டுமென்றால் அவரை போய் கேளுங்கள் என்று அந்த இயக்குனர் சோழ பொன்ரங்கத்திடம் கூறினார் பொன்னுரங்கமும் அஜித்தை பிரசாந்த் ஸ்டூடியோவில் சந்தித்து அமராவதி படத்தை பற்றி சொல்லி இருக்கிறார் கேட்டதும் முதலில் அஜித் எவ்வளவு சம்பளம் தருவீர்கள் என்று கேட்டாராம்..
இதை வைத்தே அஜித் ஒரு பெரிய ஆளாக வருவார் என பொன்னுரங்கம் நினைத்துக் கொண்டு சம்பளத்தை பேசிவிட்டு முன் பணமாக 5000 ரூபாய் அஜித் கையில் கொடுத்தாராம் படபிடிப்பு துவங்கி ஊட்டியில் 45 நாட்கள் முடிந்து திரும்ப வருகையில் எங்க குடும்ப உறுப்பினராகவே அஜித் மாறிவிட்டார் என்றும் என் மகன் போலவே மாறிவிடார் என்றும் பொன்னுரங்கம் கூறி இருந்தார்.
மேலும் பேசி அவர் சில தினங்களுக்கு பிறகு அஜித் ஒரு விபத்தில் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் இனி அஜித் அவ்வளவுதான் என்று நினைத்தார்கள் ஆனால் நினைத்தவர்களின் மூஞ்சில் கறியை பூசினார் அஜித் என்று பொன்ரங்கம் கூறினார் கஷ்டப்பட்டு மீண்டு வந்து மீண்டும் சில படங்களில் கமிட் ஆனார் ஆனால் ஏகப்பட்ட இயக்குனர்கள், தயாரிப்பாளர்களின் வீடு வீடாக ஏறி இறங்கினார் நிறைய பேரால் அஜித் அவமானப்படுத்தப்பட்டார். அதனாலையே இப்பொழுது அவர் யாரையும் சந்திக்க மறுக்கிறார் என்று பொன்னுரங்கம் கூறினார்.
ஏனெனில் அந்த அவமானம் தான் சினிமா என்ன என்பதை புரிய வைத்தது யாரை பார்க்க வேண்டும் பார்க்கக் கூடாது என்பதை உணர்த்திவிட்டது. அதையும் மீறி சந்தித்தால் தேவையில்லாத பிரச்சனைகளும் சேர்ந்து வருகிறது என்பதையும் அஜித் உணர்ந்திருந்தார் என்று கூறினார். அஜித் மிகவும் பண்புள்ள மனிதர் என்றும் இதுவரை யாரையும் நோகடிக்காமல் அனைவரையும் மிகவும் மதிக்கும் பண்புடைய குணம் கொண்டவர் என அஜித்தை பற்றி புகழ்ந்து பேசி இருந்தால் பொன்னுரங்கம்.