தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக வளம் வந்து கொண்டிருக்கும் நடிகர் அஜித் பல செண்டிமெண்ட் கொண்டவர் என்பது நாம் அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான். அதில் உதாரணமாக ஒரே இயக்குனருடன் தொடர்ந்து சில திரைப்படங்களில் நடிப்பது, வி என ஆரம்பிக்கும் பெயரில் படத்தின் டைட்டிலை வைப்பது என அஜித்தின் சென்டிமென்ட் என்று சொன்னால் பலவற்றை கூறிக் கொண்டே போகலாம்.
அந்த வகையில் தற்பொழுது எச் வினோத் இயக்கத்தில், போனி கபூர் தயாரிப்பில், யுவன் சங்கர் ராஜா இசையமைப்பில் இவர்களுடைய மூவருடன் இணைந்து மூன்று திரைப்படங்களில் நடித்து வருகிறார் அஜித் அதே போல் உதாரணமாக வி செண்டிமெண்டில் உருவான வீரம், விவேகம், விசுவாசம், வேதாளம் உள்ளிட்ட நான்கு திரைப்படங்களை இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கி அஜித் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதனைத் தொடர்ந்து அஜித் சினிமாவிற்கு அறிமுகமான காலகட்டத்தில் இருந்து இவருடைய பல படங்களில் பல இசையமைப்பாளர் இசையமைத்து இருக்கிறார்கள். அதிலும் முக்கியமாக யுவன் சங்கர் ராஜா அஜித்தின் பல திரைப்படங்களுக்கு அதிகமாக இசையமைத்து வருகிறார்.
தீனா திரைப்படத்தின் மூலம் முதன்முறையாக கைகோர்த்தார்கள் அந்த வகையில் அந்தப் படத்தில் இடம்பெற்று இருந்த பாடல்கள் மிகப்பெரிய ஹிட் பெற்றது இந்த படத்தினை தொடர்ந்து மங்காத்தா, பில்லா, பில்லா 2 சமீபத்தில் வெளிவந்த வலிமை உள்ளிட்ட அஜித்தின் பல திரைப்படங்களுக்கும் யுவன் சங்கர் ராஜா தான் இசையமைத்து உள்ளார்.
இவரை தொடர்ந்து இசை புயல் ஏஆர் ரகுமான் அவர்களின் இசையமைப்பில் பவித்ரா, வரலாறு, கண்டு கொண்டேன் கண்டுகொண்டேன் உள்ளிட்ட மூன்று திரைப்படங்களில் மட்டுமே அஜித் இணைந்துள்ளார். இவ்வாறு இந்த திரைப்படங்கள் வெளியாகி கிட்டத்தட்ட 16 வருடங்களாகி உள்ள நிலையில் ஏஆர் ரகுமான் 16 வருடங்களாக அஜித்துடன் இணையாமல் இருப்பதற்கான காரணம் தற்போது வெளியாகி இருக்கிறது.
அதாவது ஏஆர் ரகுமான் தமிழினை தொடர்ந்து ஹிந்தி உள்ளிட்ட பல்வேறு மொழிகளிலும் பல படங்களுக்கு இசையமைத்து வருகிறார் இதற்கு இடையே ஏஆர் ரகுமானை அதிகமாக தொந்தரவு செய்யக்கூடாது என்பதற்காக தான் அவரது படத்தில் கமிட்டாக மாட்டாராம் மேலும் யுவன் சங்கர் ராஜா அஜித்திற்கு ராசி என்பதால் பெரும்பாலான படத்திற்கு யுவன் சங்கர் ராஜாவையே அஜித் கம்மிட் செய்து வருகிறார்.