சினிமா உலகில் ஒரு நடிகர் தன்னை நிலைநிறுத்திக்கொள்ள தொடர்ந்து நல்ல ஹிட் படங்களை கொடுப்பதையும் தாண்டி நல்ல படியாக நடந்து கொண்டாலே ரசிகர்கள் தலையில் தூக்கி வைத்து கொண்டாடுவார்கள் அதை உணர்ந்து கொண்டவர்கள் தற்போது தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களாக இருக்கின்றனர் தற்போது அந்த ரூட்டை பல வருடங்கள் கழித்து பிடித்து உள்ளவர் நடிகர் சிம்பு.
ஆரம்பத்தில் சிறப்பாக பயணித்தாலும் இடையில் ஏற்பட்ட சில பிரச்சனைகளால் சிறிது காலங்கள் நடிக்காமல் இருந்தார் தற்பொழுது ஆனால் தனது எண்ணங்களை மாற்றிக் கொண்டு தொடர்ந்து நடித்து வருகிறார் மேலும் ரசிகர்களை சந்தித்து ட்விட்டர் பக்கத்தில் உரையாடிக் கொண்டு வருகிறார்.
இப்படி இருக்கின்ற நிலையில் வருகின்ற 25 ஆம் தேதி சிம்வின் “மாநாடு” திரைப்படம் உலக அளவில் வெளியாக இருக்கிறது இந்த திரைப்படத்தை தொடர்ந்து அவர் பல்வேறு திரைப்படங்களில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். இந்த நிலையில் மாநாடு படத்தின் பிரமோஷன் வேலைகளில் சிம்பு இறங்கியுள்ளார் ட்விட்டரில் ரசிகர்களுடன் உரையாடிக் கொண்டிருக்கும் போது பல்வேறு விதமான கேள்விகளுக்கு பதிலளித்தார்.
அதில் ஒன்றாக நீங்கள் இத்தனை வருடம் ஏன் சினிமாவில் நடிக்காமல் இருந்து உள்ளீர்கள் என கேட்டனர் அதற்கு பதிலளித்த நடிகர் சிம்பு நான் குடும்பப் பிரச்சினைகள் காரணமாக சில நாட்களில் நடிக்காமல் இருந்தேன் மேலும் குடிக்கு அடிமையாகி விட்டால் உடல் எடை அதிகமானது எனக் கூறினார் ஆனால் தற்போது அதை எல்லாம் நிறுத்தி விட்டேன் அந்த பக்கம் போறதே கிடையாது மேலும் அசைவ உணவுகளை சாப்பிடுவதும் கிடையாது.
தற்போது நான் மாமிசம் இல்லாத உணவுகளை தான் சாப்பிட்டு வருகிறேன் என கூறி உள்ளார். அதனால் தற்போது உடல் எடையை சீராக இருப்பதாகவும் அவர் கூறினார். மேலும் நடிகர் சிம்பு சிறப்பான படங்களை ரசிகர்களுக்கு கொடுக்க சினிமா உலகில் ஓட ரெடியாக இருப்பதாக தெரிவித்து உள்ளார்.