தெலுங்கு சினிமா உலகில் தொடர்ந்து ஆக்சன் திரைப்படங்களில் நடித்து மக்கள் மற்றும் ரசிகர்களுக்கு விருந்து கொடுத்தவர் நடிகர் பிரபாஸ் இருப்பினும் பெரிய அளவில் அவருடைய மார்க்கெட்டை பிடித்த தரவில்லை இந்த நிலையில் ராஜமவுலி உடன் கைகோர்த்து பாகுபலி திரைப்படத்தில் பல வருடங்கள் கஷ்டப்பட்டு உடம்பை ஏற்றினார்.
அதற்கு ஏற்றார் போலவும் சிறப்பான கதை களமாக இருந்ததால் படம் வெளிவந்து எதிர்பார்க்காத அளவிற்கு சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தது சொல்லப்போனால் தெலுங்கையும் தாண்டி மற்ற இடங்களில் இந்த படத்திற்கு நல்ல வரவேற்பு ஒவ்வொரு படமும் சுமார் 500 கோடிக்கு மேல் வசூல் வேட்டை நடத்தியதால் ராஜமௌலி மற்றும் பிரபாஸ் ஆகியோரின் பெயர்கள் அசுர வளர்ச்சியை எட்டியது.
அதன்பின் இவர் நடிக்கும் திரைப்படங்கள் ஒவ்வொன்றும் பிரமாண்ட பட்ஜெட் படங்களாக இருக்கின்றன. அந்தவகையில் பிரபாஸ் கையில் மூன்று நான்கு படங்கள் இருக்கின்றன. ராதே ஷியாம், சலார், ஆதிபுருஷ் போன்ற படங்கள் கையில் இருக்கின்றன. சினிமா உலகில் தொடர்ந்து வெற்றியை நோக்கி ஓடிக் கொண்டிருந்தாலும் நிஜ வாழ்க்கையில் சில தோல்வியை தழுவி தான் வருகிறார்.
சொல்லப்போனால் இதுவரை அவர் திருமணம் செய்து கொள்ளாமல் இருப்பது பெரும் ஆச்சர்யத்தை கொடுத்துள்ளது. இது குறித்து அவர் பேசியபோது பாகுபலி திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து நான் திருமணம் செய்து கொள்ளத்தான் முடிவு எடுத்தேன் ஆனால் காதலில் நம்பிக்கை இல்லை அதில் நான் தோல்வி அடைந்ததால்.
எனக்கு அதன்பின் எனது அம்மா அடிக்கடி திருமணம் செய்து கொள்ள சொல்லுவார்கள். எல்லா அம்மாவுக்கும் தன் மகன் செட்டில் ஆகவேண்டும் என்ற எண்ணம் உண்டு அதே எனது அம்மாவுக்கும் உண்டு இது மீதான அழுத்தத்தை அதிகப் படுத்த வேண்டாம் என கூறி உள்ளார் பிரபாஸ்.