விஜய் டிவி தொலைக்காட்சி வருஷமாக பிக் பாஸ் நிகழ்ச்சியை சூப்பராக நடத்தி அசத்தி வருகிறது. இதுவரை பிக் பாஸ் ஐந்து சீசன்கள் வெற்றிகரமாக முடிந்த நிலையில் கடந்த அக்டோபர் ஒன்பதாம் தேதி பிக் பாஸ் ஆறாவது சீசனையும் கோலாகலமாக தொடங்கியது.
வழக்கமாக பிக் பாஸ் நிகழ்ச்சியை உலகநாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்குவார் அதே போல பிக் பாஸ் சீசன் ஐயும் சீரும் சிறப்புமாக தொகுத்து வழங்கி வருகிறார். பிக்பாஸ் 6 ல் மொத்தம் 20 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர் அதில் ஒரு சிலர் எலிமினேஷன் ஆனார்கள் ஜி பி முத்து சில காரணங்களால் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார்.
அவர்களை தொடர்ந்து பிக் பாஸ் வீட்டில் மாற்ற போட்டியாளர்கள் தொடர்ந்து போட்டி போட்டுக்கொண்டு பயணிக்கின்றனர் பிக்பாஸ் வீட்டில் வாராவாரம் எலிமினேஷன் நடக்கப்படுகிறது, அதன் படி இந்த வாரமும் எலிமினேஷன் ரவுண்டு இருக்கிறது நாமினேஷனில் மொத்தம் ஏழு பேர் இருந்தனர்..
ரட்சிதா, ஜனனி, ஆயிஷா, அசிம், ஏ டி கே, மகாலட்சுமி, அசல் போன்றோர் நாமினேஷனில் சேர்க்கப்பட்டனர் குறைந்த ஓட்டுக்களை வாங்கும் பிரபலம் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேற வேண்டும் அப்படி இப்பொழுது குறைந்த ஓட்டுகளை வாங்கி இருக்கும் பிரபலம் வேறு யாரும் அல்ல அசல் தான்.. ஏனென்றால் இவர் பிக் பாஸ் வீட்டில் அடியெடுத்து வைத்ததிலிருந்தே..
பெண்களுடன் சற்று வித்தியாசமாக நடந்து கொள்வது மக்களிடையே சற்று சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது ஆதனால் அவருக்கு குறைந்த ஒட்டுகளை இதுவரையிலும் கிடைத்துள்ளன. அதனால் இவர் இந்த வாரம் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறுவார் என்பது பலரின் கருத்தாக இருக்கிறது ஆனால் பொறுத்திருந்து பார்க்கலாம் எது வேண்டுமானாலும் நடக்கும்..