விஜய் டிவி தொலைக்காட்சி மக்கள் மற்றும் ரசிகர்களை கவர்ந்திழுக்க புதிய புதிய சீரியல் மற்றும் நிகழ்ச்சிகளை நடத்துவது வழக்கம் அந்த வகையில் அண்மையில் நடத்திய ஷோ ராஜு வீட்டில பார்ட்டி.. இந்த ஷோ நல்ல வரவேற்பை பெற்று மக்கள் மத்தியில் சூப்பராக ஓடிக்கொண்டிருக்கிறது ஆனால் அதற்குள்ளேயே இன்னொரு ஷோவையும் கொடுத்து ரசிகர்களை இரட்டிப்பு சந்தோஷத்தில் ஆழ்த்தியுள்ளது.
விஜய் டிவி தொலைக்காட்சியை அது வேறு இதுவும் அல்ல பிக்பாஸ் தான்.. பிக் பாஸ் நிகழ்ச்சி மக்களுக்கு எப்பொழுதுமே பிடித்த நிகழ்ச்சி இதனை சீசன் சீசனாக நடத்தி வருகிறது இதுவரை 5 சீசன்கள் வெற்றிகரமாக முடிந்த நிலையில் அண்மையில் பிக்பாஸ் 6 வது சீசனையும் வெற்றிகரமாக தொடங்கியது.
நல்ல வரவேற்பை பெற்று ஓடிக் கொண்டிருக்கிறது இதில் மொத்தம் 20 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஆரம்பத்திலேயே சண்டைகளும், பிரச்சனைகளும் பெரிதாக எழும்புகின்றன இதனால் இதில் யார் வெற்றி பெறுவார் என்பது சரியாக இனமே கணிக்க முடியாமல் இருக்கிறது. ஆனால் ஒரு சிலரின் பெயர்கள் தொடர்ந்து அடிப்படுகின்றன.
அதில் ஜி பி முத்து, ரட்சிதா, அமுதவாணன் போன்றவர்கள் பிக் பாஸ் டைட்டிலை தட்டி தூக்க அதிக வாய்ப்புகள் இருக்கிறது. இப்படி இருக்கின்ற நிலையில் இந்த வாரம் எலிமினேஷன் ரவுண்டு இருக்கிறது இதில் மக்கள் மத்தியில் குறைவான ஓட்டுகளை வாங்கி கடைசி நான்கு இடத்தை பிடித்திருப்பது யார் யார் என்பது குறித்து விலாவாரியாக பார்ப்போம்..
அவர்கள் யார் என்றால் ஷெரினா, ஷிவின், மகேஸ்வரி மற்றும் சாந்தி ஆகிய நான்கு பேர் தான் கடைசி இடத்தில் உள்ளனர் அதில் குறைந்த ஓட்டுகளை பெற்றிருப்பவர் சாந்தி இவரே வெளிவர வாய்ப்புகள் இருப்பதாக சொல்லப்படுகிறது ஆனால் இது குறித்து இன்னும் அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளிவரவில்லை..