இந்திய அணி நியூசிலாந்துடனான 2வது டெஸ்ட் போட்டியில் விளையாடிய கொண்டிருக்கிறது முதல் டெஸ்ட் போட்டி டிராவானது. இரண்டாவது போட்டியில் இந்தியா வென்று கோப்பையை கைப்பற்ற போராடி வருகிறது இப்படி இருக்கின்ற நிலையில் முதல் போட்டியில் ரஹானே கேப்டனாக செயல்பட்டார்.
இக்கட்டான சூழ்நிலையில் தவித்தபோது ரகானே மிகப்பெரிய ஒரு ஸ்கோரை அடித்து அணியை வெற்றிப் பாதைக்கு எடுத்துச் செல்வார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த முடியாமல் ஆட்டமிழந்து வெளியேறினார் இது பலருக்கும் அதிர்ச்சி கொடுத்தார் மேலும் ரகானே இதுவரை 20 இன்னிங்ஸில் விளையாடி வெறும் 407 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார்.
அதில் இரண்டு இரண்டு அரை சதங்கள் மட்டுமே ஆகும் ஒரு துணை கேப்டன் மோசமாக விளையாடுவதே பிசிசிஐ மற்றும் கிரிக்கெட் ரசிகர்களிடையே பெரும் கடுப்புக்கு உள்ளாகியது. இதனை அடுத்து துணை கேப்டனாக பொறுப்பையும் வேறு ஒருவருக்கு கொடுக்க ரெடியாக இருக்கிறது பிசிசிஐ முடிவெடுத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. டெஸ்ட் கிரிக்கெட்டைப் பொறுத்தவரை கேப்டனாக கோலி செயல்பட அதிக வாய்ப்புகள் இருப்பதாக கணிக்கப்பட்டுள்ளது.
20 பார்மட்டில் முழுநேர கேப்டன் ரோகித் சர்மா அண்மையில் பொறுப்பேற்றுக்கொண்டார் இப்பொழுது துணை கேப்டன் பதவி யாருக்கு செல்லும் என்பது பெரிய கேள்விக்குறி இருக்கிறது கே எல் ராகுல் ஒருபக்கம் துணை கேப்டனாக பரிந்துரைக்கப்பட்டுள்ளார். மறுபக்கம் சமீபகாலமாக டெஸ்ட் கிரிக்கெட்டில் அசுர வளர்ச்சியை எட்டி உள்ள ரோகித் சர்மா கேப்டன் பொறுப்பில் எப்போதுமே சிறப்பாக செயல்படக் கூடியவர்.
என்பதால் துணை கேப்டனாக அவரை போடவும் அதிக வாய்ப்புகள் இருப்பதாக தெரியவந்துள்ளது ஆனால் பிசிசிஐ ஒருமனதாக ரோகித் சர்மாவை துணை கேப்டனாக அதிக வாய்ப்புகள் இருப்பதாகத் தெரிவிக்கின்றன. அதுவும் சவுத் ஆப்பிரிக்கா டெஸ்ட் போட்டியில் ரோகித் சர்மா துணை கேப்டனாக செயல்பட அதிக வாய்ப்புகள் இருப்பதாக தற்போது தகவல்கள் கசிகின்றன.