தமிழ் சினிமாவில் பல சூப்பர் ஹிட் படங்களை கொடுத்து இன்றுவரையிலும் சிறந்த இயக்குனர் என்ற அந்தஸ்தை மக்கள் மத்தியில் பெற்றவர் இயக்குனர் கஸ்தூரிராஜா.
இவர் இயக்கிய முதல் திரைப்படமே தாறுமாறான ஹிட் அடித்து. மேலும் வசூலில் மிகப்பெரிய அளவில் சாதனை படைத்தது அந்த படம் இருபது ஆண்டுகளுக்கு முன்பு வெளியாகினாலும் இன்று வரையிலும் மக்கள் மத்தியில் பேசப்படும் படமாக இருந்து வருகிறது.
அந்த படம் வேறு எதுவுமில்லை ராஜ்கிரண் நடிப்பில் 20 வருடங்களுக்கு முன்பு வெளியான “என் ராசாவின் மனசிலே” படம் தான்.
இப்படம் இயக்குனர் கஸ்தூரிராஜாவுக்கும், ராஜ் கிரணுக்கும் மிகப்பெரிய ஒரு சூப்பர்ஹிட் படமாகும்.
இயக்குனர் கஸ்தூரி ராஜாவுக்கு முதல் படம் என்பதால் இது இன்றுவரையிலும் அவரால் மறக்க முடியாத படம் ஏனென்றால் அந்த அளவுக்கு ஓடியது.
சிறப்பான கதை களம் என பல அம்சங்கள் நிறைந்து இருந்தாலும் ராஜ்கிரண் தொடை தெரியும்படி லுங்கியை தூக்கி கட்டுவது ,சாப்பிடும் விதம் போன்றவை இந்த திரைப்படத்தில் சிறப்பான காட்சியாக இருப்பதோடு இன்று வரையிலும் பேமஸான காட்சியாக அமைந்துள்ளது.
மேலும் இளையராஜாவின் இசையில் வெளியான பாடல்களும் இதில் மாபெரும் ஹிட்டடித்தன.
ஆனால் முதன்முதலில் ராஜ்கிரன் கேரக்டரில் கஸ்தூரிராஜா நடிக்க வைக்க விஜயகாந்த் மற்றும் சத்யராஜை சந்தித்தார் .
ஆனால் அந்த இரண்டு நடிகர்களும் மற்ற படங்களில் பிசியாக இருந்ததால் இந்த படத்தில் நடிப்பதை முற்றிலுமாக தவிர்த்தனர். அதன்பிறகு கஸ்தூரிராஜா ராஜ்கிரணை இந்தப் படத்தில் கமிட் செய்தார்.
படம் வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட் அடிக்க பிறகு விஜயகாந்த் மற்றும் சத்யராஜ் இருவரும் இப்படி ஒரு மாபெரும் ஹிட் படத்தை தவற விட்டோம் என புலம்பி தள்ளினார்.