தமிழ் சினிமாவில் தற்போது உச்சத்தை நோக்கி ஓடிக் கொண்டிருக்கும் சிவகார்த்திகேயன் ஆரம்பத்தில் சின்னத்திரையில் சில நிகழ்ச்சிகளை தொகுத்து ரசிகர்களின் கண்களில் தென் பல தொடங்கினார் அவர் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சிகள் சிறப்பாக இருக்க அவரது காமெடி மற்றும் அவரது பேச்சுமே காரணம் என கூறப்பட்டது.
இது இயக்குனர்களையும் தயாரிப்பாளர்களையும் வெகுவாக கவர ஒருகட்டத்தில் வெள்ளித்திரையில் வாய்ப்பு கிடைத்தது அந்த வகையில் மெரினா என்னும் திரைப்படத்தின் மூலம் தனது சினிமா பயணத்தை தொடர்ந்தாலும் அதன் பிறகு சினிமா எப்படிப்பட்டது என்பதை நன்கு உணர்ந்து கொண்டு தனது உடலமைப்பை மாற்றி கொண்டும் நடிப்பை வெளிக்காட்டவும் தொடங்கினார். அந்த வகையில் அவரது அடுத்தடுத்த திரைப்படங்கள் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தது.
திரைப்படங்கள் குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் வரை அனைவரையும் கவரும் திரைப்படங்களாக இருந்ததால் அவரது திரைப்படங்கள் மிகப்பெரிய வசூல் வேட்டை நடத்தியது இதன் விளைவாக தனது சம்பளத்தை மிகப்பெரிய அளவில் கொண்டதோடு மட்டுமல்லாமல் தற்போது முன்னணி நடிகர் லிஸ்டில் இணைந்துள்ளார். சிவகார்த்திகேயன் நடிப்பில் தற்போது டாக்டர், டான், அயாலன் போன்ற படங்கள் வெளியாக இருக்கின்றன.
இப்படி இருக்கின்ற நிலையில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட்டடித்த திரைப்படம் ரஜினிமுருகன் இந்த திரைப்படம் காமெடியாகவும் காதல் போன்றவற்றை எடுத்துச் சொல்லும் படமாக இருந்தது. ரஜினி முருகன் படம் சிவகார்த்திகேயனுக்கு ஒரு திருப்புமுனை படமாக அமைந்தது இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்து இருந்தார்.
கோடி ரசிகர்களுக்கு நல்ல விருந்து படைத்தது ஆனால் உண்மையில் சொல்லவேண்டுமென்றால் ரஜினி முருகன் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக முதலில் பல நடிகைகளை தேர்வு செய்தனர் ஆம் அந்த வகையில் யார் யார் என்பதை தற்போது பார்ப்போம். நஸ்ரியா, தமன்னா, சமந்தா, லட்சுமிமேனன் ஆகியோரை முதலில் அணுகியது ஆனால் அவர்கள் சில காரணங்களால் இந்த படத்தில் நடிக்க மறுக்கவே ஒருவழியாக கீர்த்தி சுரேஷ் ஜோடியாக நடிக்க ஒப்பந்தம் செய்து இந்த பட வாய்ப்பு சென்றது.