இளைய தளபதி விஜய் மாஸ்டர் திரைப்படத்தை தொடர்ந்து இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் பீஸ்ட் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார் இந்த திரைப்படத்தில் இவருடன் இணைந்து பல சினிமா பிரபலங்கள் நடித்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது அதிலும் குறிப்பாக இளைய தளபதி விஜய் இந்த திரைப்படத்தில் ஒரு ராணுவ அதிகாரியாக நடிக்கிறார்.
என தகவல் வெளியாகிய நிலையில் இந்த ராணுவ காட்சிக்காக காஷ்மீரில் செட் போட்டு தற்போது படப்பிடிப்பு மிக பிரம்மாண்டமாக நடைபெற்று வருகிறது. தளபதி விஜய் நடிப்பில் வெளியான பல திரைப்படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றிருக்கும் அந்த வகையில் இவரது நடிப்பில் மிக பிரம்மாண்டமாக உருவாகி கடந்த வருடத்தில் வெளியான திரைப்படம் மெர்சல்.
இந்த திரைப்படத்தில் தளபதி விஜய் 3 கதாபாத்திரங்களில் நடித்து இருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.மேலும் இந்த திரைப்படத்தில் ஒரு காட்சியில் நடிகர் விஜய் வெளிநாட்டிற்கு செல்லும் பொழுது விமான நிலையத்தில் வேட்டியுடன் வருவார் அப்பொழுது அங்குள்ள காவல் துறையினர் இவரை சோதனை செய்து அனுப்புவார்கள்.
இந்த காட்சிக்கு பிறகு அடுத்த முறை வரும்போது வேட்டிக்கு பதிலாக வேறு ஆடை அணிந்து வாருங்கள் என்று ஒரு இலங்கை பெண் கூறுவார் அதற்கு விஜய் நான் ஆயிரம் முறை வந்தாலும் நான் இப்படி தான் வருவேன் என்று வியப்பூட்டும் அளவிற்கு அந்த வசனம் இருக்கும். இந்நிலையில் இலங்கை பெண்ணாக வந்த அந்த நடிகை யார் என்று தெரியுமா அவர் என்ன வேலை செய்கிறார் என்பது பற்றிய தற்பொழுது தகவல் கிடைத்துள்ளது.
அவரது பெயர் ஷனா மகேந்திரன் இவர் லண்டனில் டிவி நிகழ்ச்சியில் தொகுப்பாளராக பணிபுரிந்து வருகிறார் அதுமட்டுமல்லாமல் லண்டனில் இவர் தொகுப்பாளினியாக இருந்த இவர் ஒரு திரைப்படத்தில் கதாநாயகியாகவும் நடித்துள்ளார். ஆம் இலங்கையில் வெளிவந்த மண் என்ற திரைப்படத்தில் இவர் கதாநாயகியாக நடித்து மக்கள் மத்தியில் புகழ் பெற்று விளங்கி உள்ளார்.
அதனைத் தொடர்ந்து தான் மெர்சல் திரைப்படத்தில் சின்ன காட்சியாக இருந்தாலும் பரவாயில்லை என்று தளபதி விஜய்யுடன் இவர் நடித்து இருப்பார் இந்நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசிய இவர் தளபதி விஜய் சாரை நான் பார்த்த பொழுது அவர் மிகவும் அமைதியாக இருந்தார் ஆனால் இவர் அமைதியாக இருந்ததால் தான் இவ்வளவு பெரிய நடிகராக வளர்ந்து இருக்கிறார் என்பதை நான் அப்போதே புரிந்து கொண்டேன் என்று விஜயை பற்றி பல விஷயங்களை கூறியுள்ளாராம்.